இஸ்ரவேலும் சபையும் #2 Jeffersonville, Indiana, USA 53-0326 1இந்தக் கூட்டம் நடக்கும் காலகட்டத்தில்... இன்றிரவு வேத ஆராய்ச்சியைத் துவங்கும்படியாக, நாம் இப்பொழுது யாத்திராகமம் முதலாம் அதிகாரத்திற்கு வேதாகமத்தைத் திறக்கிறோம். இது ஒரு நீண்ட, மிகவும் நீண்டதொரு வேத ஆராய்ச்சியாகும், நாம் ஒரு - ஒரு சில இரவுகளுக்குள்ளாக, இதை ஒன்றாகப் பொருத்த முயற்சிக்கலாம். நான் இதைச் செய்து கொண்டிருப்பதன் காரணம் என்னவென்றால், இந்த எழுப்புதலானது ஈஸ்டர் வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் என்று நம்புகிறேன், ஒருக்கால் இது தொடர்ந்து கொண்டேயிருக்கலாம். நீங்கள் இன்னும் போதுமான அளவு கற்றுக்கொண்டிராமல், அதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்கும் போது... நாங்கள் தேவையைக் காட்டிலும் அதிக மாகக் கொண்டு இதைத் துவங்க ஒருபோதும் விரும்ப வில்லை. அதில் எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. 2நான் இங்கே இந்த எழுப்புதலில் எதற்காக இருக்கிறேன், அது எனக்கு - எனக்குத் தெரியாது. நான்.. அதெல்லாமே எனக்குப் புரியாத ஒரு புதிராகவே உள்ளது. மெகோன், நாஷ்வில், மற்றும் அங்கே அதனூடாக நடக்கும் கூட்டங் களைக் குறித்து, இந்தப் பிற்பகலில், மேலாளர் என்னைத் தொலைபேசியில் அழைத்த போது, நாங்கள் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டோம் (canceled out). அவைகளில் சில கூட்டங்கள் அரங்கங்களை உடையவைகளாகும். அவைகள் கிடைப்பதற்காக கடந்த மூன்று அல்லது நான்கு ஐந்து வருடங்களாக முயற்சித்து வந்தோம், அவைகளில் அநேக ஜனங்கள், 20,000 பேர் வரை உட்காரலாம்..... நாங்கள் கடைசியாக மெரிடியனில் கூட்டத்தை நடத்தி விட்டு வந்திருக்கிறோம் (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்), அதில் உள்ளே 4,500 பேர் இருந்தனர், வெளியே எத்தனை பேர் இருந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, அவர்கள் மழையிலும், புயல்களிலும், மற்றும் காரியங்களிலும் நின்று கொண்டிருந்தார்கள், நாங்கள்.... அங்கே வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் டல்லஸியை விட்டுப் புறப்பட்ட போதும், அது அதே விதமாகவே இருந்தது, ஜனங்களை உட்கார வைக்க ஒரு இடத்தைக் கூட எங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை . பரிசுத்த ஆவியானவர், “நிறுத்து. இப்பொழுது வீட்டிற்குச் சென்று, காத்திரு, நான் உன்னை கடல் கடந்து வெளிநாட்டுக்கு அனுப்பப் போகிறேன்” என்றார். நல்லது, இதோ நான் இருக்கிறேன். 3நான் அப்படியே ஏழு கூட்டங்களை ரத்து செய்து விட்டேன். அப்படியே ஏழு கூட்டங்களை ரத்து செய்து முடித்து விட்டேன், அவைகளில் ஒரு கூட்டமானது இங்கே இந்தியானா, கானர்ஸ்வில்லில் உள்ளதாகும். அவைகளில் ஒன்று கனடாவிலுள்ள ஆல்பெர்ட்டாவில், அங்குள்ள ஒரு பெரிய அரங்கத்தில் இருந்தது, அங்கே 25,000 பேர் அமரலாம், சிலகாலமாகவே அந்த அரங்கம் கிடைப்பதற்காக நாம் முயற்சித்து வந்தோம். சரியாக அது நமக்குக் கிடைத்து, ஒரு நாடுதழுவிய (nation-wide) பகுப்பாய்வைத் தொடங்குவதற்கு எல்லாமே ஆயத்தாயிருந்து, அங்கே ஒருக்கால் முப்பதாயிரம், நாற்பதாயிரம் பேர் வருவார்கள்) என்று நாங்கள் எதிர்பார்த்த நிலையில், பரிசுத்த ஆவியானவர், “நிறுத்து” என்று சொல்லி, பிறகு இன்றிரவு போன்று இங்கே கூடாரத்திற்கு என்னை அனுப்பினார். பாருங்கள்? பாருங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் சொல்லுகிறாரோ அதையே நீங்கள் செய்ய வேண்டும். ஒரு - ஒரு சின்னஞ்சிறு கூடாரத்துக்கு வரும்படி, அதைப்போன்ற ஜனக்கூட்டத்தை விட்டு விடுவீரா?“ என்று கேட்கலாம். நல்லது, இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். நாம் தேவனை சேவித்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? 4பிலிப்பு சமாரியா முழுவதும் அந்த அசைவைக் கொண்டிருந்த போது, பிலிப்பு அந்தப் பெரிய எழுப்புதலை விட்டு விட்டு, வெளியே காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரத்துக்குப் போய், ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கும் படியாக அங்கே நின்று கொண்டிருந்தான், அதன்பிறகு அவன் ஒருபோதும் அந்த எழுப்புதலுக்குத் திரும்பிச் செல்ல வில்லை. அது சரிதானா? காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரம் மட்டுமாகச் சென்று, எத்தியோப்பியனாகிய ஒரு மனிதனைக் கண்டுபிடித்தான், அம்மனிதன் மனமாற்றம் அடைந்தான். அதன்பிறகு அவன் அங்கிருந்து திரும்பினான், அவன் அந்த மகத்தான எழுப்புதலைக் கொண்டிருந்த சமாரியாவுக்கு மறுபடியும் திரும்பிச் செல்லவேயில்லை. 5இப்பொழுது, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்களுக்காக உண்மையிலேயே நாங்கள் நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். நாம் போக வழிநடத்தப்படுவது போன்றே போக வேண்டும். இதைச் செய்யும்படியாக இங்கே இந்தக் கூட்டத்துக்கு வர வேண்டுமென்று, மிக நிச்சயமாக வழி நடத்தப்படுவதை நான் உணருகிறேன். நான் வெறுமனே ஒரு சிறிய.... ஓ, சகோதரனே, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சகோதரன் பிளிமன் அவர்களே, உங்களுக்கு விருப்பமானால், இங்கேயும் கூட இன்னுங்கூடுதலாக இரண்டு உள்ளன. ஒருக்கால் வேதாகமம் இல்லாத யாராவது அவைகளை எடுத்துக் கொள்ளலாம். பழைய ஏற்பாடு, நாம் பழைய ஏற்பாட்டில் தான் கற்றுக் கொண்டு வருகிறோம், குறிப்பாக, இன்றிரவு நாம் அதில் தான் கற்றுக் கொண்டிருக்கிறோம், ஏனென்றால் நாம் மாதிரியை (pattern) கற்றுக்கொண்டு வருகிறோம். ஒரு வேதாகமம் வேண்டுமென்றிருக்கிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அப்பொழுது அவர்கள் அதை உங்களிடம் கொண்டு வர முடியும். உங்கள் வேதாகமங்களையும், உங்கள் பென்சில்களையும், தாளையும், மற்றும் எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள், அப்பொழுது நீங்கள் வசனங்களைக் (text) குறித்துக்கொள்ளலாம். சென்ற மாலையில், சென்ற இரவில், சற்று தாமதமாக தரித்திருந்தோம். என்னால் கூடுமான எல்லாவற்றையும் செய்து, கூடுமானால், அதை இன்றிரவில், திரும்பப் பெற முயற்சிக்கப் போகிறேன். (அந்த அளவுக்கு நான் வார்த்தையை மிக நன்றாக நேசிக்கிறவன், நான் அதற்குள் போகும் போது, நான் அப்படியே என்னையே மறந்து விடுகிறேன். சென்ற இரவில், நாம் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷத்தை நோக்கி துவக்கம் முதல் முடிவு வரைக்கும் போனோம் என்று நினைக்கிறேன். அப்பொழுது நான் நேரம் எல்லாவற்றைக் குறித்தும், மற்ற எல்லாவற்றைக் குறித்தும் அப்படியே மறந்து போய் விட்டேன். 6நான் இந்தக் கூட்டங்களில் ஒன்றைக் கொண்டிருப்பது, ஏழு வருடங்களில் இதுவே முதல் முறையாகும், இந்த அடுத்த வாரத்தில், கூடாரத்தில் நடக்கும் இந்த எழுப்புதலை முடித்துக்கொள்வேன். என்னுடைய பிரியாவிடை செய்தி (farewell sermon) என்னவென்று எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளுக்கு சவால் விட முயற்சிக்கும் விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ் தியன் யார்? ஏழு வருடங்களுக்கு முன்பு, இந்தக் கூடாரத்தில் என்னுடைய பிரியாவிடை செய்தியாக அது இருந்தது, அது இறுதியான செய்தியாக இருந்தது, வருகிற இந்த வாரத்தில். சரி, அங்கேயிருக்கும் என்னுடைய சிறிய மகளுக்கு வயது இரண்டு வாரங்கள் தான் ஆகியிருந்தது. அவள் பிறப்பது வரை, நான் தங்கியிருக்க அவர் அனுமதிப்பாரென்றால், நான் போவேன்“ என்று நான் தேவனுக்கு வாக்குக் கொடுத்தி ருந்தேன். பிறகு அது முதற்கொண்டு, நான் ஒரு இரவோ அல்லது இரண்டு இரவுகளோ, இங்கும் அங்குமாக பிரயாணம் செய்திருக்கிறேன். அவ்விதமாய், கர்த்தர் எங்களை மகத்தான விதத்தில் ஆசீர்வதித்திருக்கிறார். சரியாக எங்களுடையஎங்களுடைய கூட்டத்தில், எங்கோவுள்ள ஏறக்குறைய 5 இலட்சம் ஆத்துமாக்கள் மனமாற்றம் அடைந்திருக்கிறார்கள். சற்றே அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஏழு வருடங் களில்! அது காண்பிக்கத் தான் போகிறது. ஒரே நாளில், 30,000 மனமாற்றங்கள்! அது அற்புதமானது ன்று உங்க ளுக்குத் தெரியும். நான் ஒவ்வொரு முறையும் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில், என்னுடைய தலையே சுற்றி விடுகிறது. இன்றைக்கு, ஆப்பிரிக்காவிலிருந்து கடிதங்கள் கிடைத்தது, அதில், தென் ஆப்பிரிக்கா முழுவதும் மறுபடியும் அசைக்கப்பட ஆயத்தாயுள்ளது” என்று எழுதப்பட் டிருந்தது, நாங்கள் எப்போது திரும்பிச் செல்வோம் என்று அந்தத் தேதியை அறிந்து கொள்ள அவர்கள் விரும்பு கிறார்கள். ஓ, என்னே! 7அதன்பிறகு கர்த்தர் அந்தத் தரிசனத்தை அருளி, இந்தியாவில் நடக்கும் ஒரே கூட்டத்தில் 3 இலட்சம் ஜனங்கள் கலந்து கொள்வார்கள்“ என்றார். நீங்கள் அதை எழுதி வைத்து, அது சரியா இல்லையா என்று பாருங்கள். இப்பொழுது, அதன்பேரில் அதிகமான காரியங்கள் உள்ளன, சுகமளித்தலின் பேரில், சுகமளித்தலைக் குறித்து (பேசிக்கொண்டே போகலாம். இப்பொழுதோ அதிலிருந்து என்னுடைய சிந்தையை தளர்த்திக்கொண்டு, அப்படியே வார்த்தையைப் போதிக்கும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, நான் அதில் திறமையற்றவன், ஆனால் அதைக் குறித்து எனக்குத் தெரிந்ததை கூறும்படி நான் -நான் விரும்புகிறேன். 8இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை காலையில், நாம் கேள்விகளைக் கொண்டிருக்கப் போகிறோம், வேதவாக்கியத்தின் பேரில் நீங்கள் விரும்பும் எந்தக் கேள்வியாக இருந்தாலும், அது என்னுடைய அபிப்ராயமாகும். எனவே நாம் ஞாயிறு காலையில், நம்மால் கூடிய மட்டும் சிறந்த முறையில், அதை வேதாகமத்தினூடாக கொண்டு வர முயற்சிப்போம். நீங்கள் ஞாயிறு காலைக்கு முன்பே அதைக் கொண்டு வந்து விடுங்கள், சனிக்கிழமை இரவு மட்டுமாக, வேதவாக்கியத்தின் பேரிலுள்ள எந்தக் கேள்வியையும், உங்களுடைய மனதைக் குழப்புகிற எதுவாக இருந்தாலும் அதைக் கொண்டு வாருங்கள். ஞாயிறு காலையில், கேள்விகளாக இருக்கும். உங்களுக்கு அது பிடிக்குமா? இப்பொழுது, நீங்கள், இவைகள் எப்படி இருக்க முடியும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை“ என்று கூறுகிற ஏதோவொன்று உங்களிடம் இருக்குமானால். நல்லது, அதைக் கொண்டு வாருங்கள், நாம் ஒன்றாக போக முடியுமா என்று பார்ப்போம், ஒருக்கால் நாம் எல்லாருமே ஒருமித்து அதைப் புரிந்து கொள்ள முடியும். நான் என்னால் கூடிய மட்டும் சிறந்த முறையில், அதை வேதவாக்கியத்தோடு வரிசைப் படுத்திக் காண்பிப்பேன், ஏனென்றால் அது நிச்சயமாக வேதப்பூர்வமாக இருந்தாக வேண்டும் அல்லது அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லவென்று நான் நம்புகிறேன். 9இப்பொழுது, கடந்த இரவில் “சபையினுடைய முதலாவது தொடக்கத்தை நாம் கற்றறிந்து கொண்டோம். தேவன் யாருக்கு வாக்குத்தத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்? ஆபிரகாமுக்கு, அவன் நம்மெல்லாருக்கும் தகப்பனாயிருக்கிறான். ஆபிரகாமுக்குத்தான் வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருந்தது; ஆபிரகாமுக்கு மாத்திரமே வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்தது, அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும். அது சரிதானா? ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும்.” அவனுடைய சந்ததி என்பது அவனுடைய பிள்ளைகள் எல்லாரும் அல்ல, ஆனால், ஈசாக்கினிடத்தில் அவனுடைய சந்ததி விளங்கும். அது சரிதானா? இங்கே ஆபிரகாமுடைய சந்ததியின் முடிவுகள் இருக்கிறது: இயேசு கிறிஸ்து ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார், கிறிஸ்துவுக்குள் மரித்த நாமும் ஆபிரகாமின் சந்ததியாராகவும் வாக்குத்தத்தத்தின் படியே சுதந்தரராயும் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். ஆமென். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! 10கடந்து போன காலத்தைக் (கடந்து) வயதாகிக் கொண்டு, இங்கிருக்கிற நாம், ஒரு மனிதனோ, பெண்ணோ இருபத்தைந்து வயதைக் கடக்கும் போது, உங்களுடைய வாலிப நாட்கள் முடிந்து விடுகின்றன, நீங்களும் கூட அதை சந்தித்திருக்கலாம், பாருங்கள். சூரியன் அஸ்தமிப்பதை நாம் பார்க்கையில், அந்த மகிமையான வாக்குத்தத்தத்தை நினைத் துப்பார்க்கும் போது. அது என்னவாக இருக்கிறது? வாழ்க்கை முடிந்து விட்டதா? ஓ, இல்லை. வாழ்க்கை இன்னும் தொடங்கவேயில்லை. ஓ, நாம் அப்படியே போய்க் கொண்டிருக்கிறோம்! இதை நான் விரும்புகிறேன், காலமானது எதையுமே அர்த்தப்படுத்தாமல், அப்படியே அவ்விதமாகவே அதனுள்ளே தொடர்ந்து இருந்தவாறு, வேதவாக்கியங்களிலிருந்து அக்காரியங்களைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, ஜனங்களுக்கு முன்பாக, ஒரு ஒழுங்கான ஜீவியத்தை வாழத் தொடங்குவதற்கு நம்மால் இயன்ற ஏதோவொரு வழி அங்கே இருந்ததே. அவர்கள் அங்கே இருக்கிறார்கள், நண்பர்களே. தேவ னுடைய வேதாகமத்தைக் கொண்டும், பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையைக் கொண்டும் என்னால் அதை நிரூபிக்க முடியும், மறுபடியும் பிறந்து, கிறிஸ்துவுக்குள்ளிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும், இந்நாட்களில் ஒன்றில், அந்த நரைமயிர்கள் மாறிப்போய் விடும், சுருக்கங்கள் உங்களுடைய முகத்திலி ருந்து ஓடிப்போய் விடும். நீங்கள் மறுபடியுமாக ஒரு வாலிப மனிதனுக்கோ அல்லது வாலிப பெண்ணுக்கோ திரும்பிச் சென்று, கிறிஸ்து இயேசுவோடு கூட என்றென்றுமாக ஜீவிப்பீர்கள். தேவன் அதை வேதாகமத்தில் எந்த இடத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்பதையும், அவர் அதைக் குறித்த நிழல்களையும் (shadows), அடையாளங்களையும் காண்பித்து, அதை வாக்குத்தத்தம் பண்ணி, அவர் அதைச் செய்வார் என்று அதைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறார் என்றும் என்னால் உங்களுக்குக் காண்பிக்க முடியும். எவ்வளவு அற்புதமாயுள்ளது! அப்படியானால் என்னுடைய மனைவியை நான் நேசிப்பேனா? நிச்சயமாக, இப்பொழுது நான் நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக அப்பொழுதும் நான் நேசிப்பேன். அது எப்படி இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை , ஆனால் நான் அவ்வாறு செய்வேன். அப்போது அவள் என்னுடையவளாக இருப்பாளா? நிச்சயமாக, அவள் என்னுடைய துணையாக இருப்பாள். அவளுக்கு.... எந்தப் பிள்ளைகளோ அல்லது எதுவுமோ இருக்காது, ஆனால் இங்கே பூமியின் மேல் எங்களுக்கு இருக்கும் இந்தப் பிள்ளைகள், அவர்கள் மறுபடியும் பிறந்திருப்பார்களானால், அவர்களும் எங்களோடு கூட அங்கேயிருப்பார்கள். அது சரியே. அது அற்புதமாக இருக்காதா? 11நான் வழக்கமாக இவ்வாறு சிந்திப்பதுண்டு, அங்கே மேலே நமக்கு செட்டைகள் இருக்குமென்றும், நாம் சுற்றிலும் பறந்து செல்வோம் என்றும் அம்மா வழக்கமாக என்னிடம் கூறுவார்கள் (அம்மா, அதிகம் தெரிந்து வைத்திருக்கிற உங்களுக்கு முன்பாக கூட (இதைக் கூறுகிறேன்) என்பதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்), உங்களுக்குத் தெரியும். மேலும், ஏன், நான் புசிக்கவும், குடிக்கவும், ஜனங்களோடு கரங்களைக் குலுக்கவும், ஐக்கியம் கொள்ளவும் விரும்புகிறேன். நான், ஓ, என்னே, அப்போது அது முடிவடைந்து விடுமே“ என்று நினைத்தேன். ஓ, இல்லை. தேவன் என்னை ஒரு தூதனாக உண்டாக்கவேயில்லை என்றும், அவர் என்னை ஒரு மனிதனாகத்தான் உண்டாக்கினார் என்றும், நான் எப்போதுமே ஒரு மனிதனாகத்தான் இருப்பேன் என்றும், ஒருபோதும் ஒரு தூதனாக இருக்க மாட்டேன் என்பதையும் நான் கண்டுபிடித்தேன். அது ஒரு தவறாக இருக்கிறது. தேவனிடம் தூதர்கள் உண்டு, நிச்சயமாக, அவர் தூதர்க ளையும் உண்டாக்கினார். அவர் செட்டைகளோடு கூட கேரூபீன்களை உண்டாக்கினார், மேலும் அவர் தூதர்களை செட்டைகள் இல்லாமல் உண்டாக்கினார். 12நான் ஒரு பாவியாக இருந்து, அந்த இடங்களுக்குப் போகும் போது, நான் வழக்கமாக இந்தப் பழைய பாடல் களைக் கேட்பதுண்டு, அப்போது அது பழுப்பு நிற கண்களுடைய தூதன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறான்! என்பதைப் பற்றிய பாடல்களாகும். நான், “ஓ, என்னே , ஒரு தூதன்!' என்று நினைத்தேன். பிறகு அது பிசாசினுடைய ஒரு பொய் என்பதைக் கண்டுகொண்டேன். அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லவே இல்லை . புரிகிறதா? நாம் முற்றிலுமாக மனிதனாகவும் பெண்களாகவும் தான் இருக்கிறோம். மேலும் நாம் மனிதனாகவும் பெண்களாகவுமே மறுபடி இந்த பூமிக்குத் திரும்பி வருவோம். அது சரியே. அதுதான் தேவனுடைய போதகமாகும். நீங்கள் அந்தக்காரியங்களைக் காணும்போது, அது நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பாராட்டும்படி செய்கிறது. 13இப்பொழுது இன்றிரவில் நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், பழைய ஏற்பாடு எவ்வாறு இருந்தது என்ற நிழலை புதிய ஏற்பாட்டுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எல்லா பழைய காரியங்களும், வரப்போகிற காரியங்களின் முன்னடையாளமாகவோ அல்லது நிழலாகவோ இருந்தது“ என்று வேதவாக்கியம் கூறுகிறது. இப்பொழுது, இன்றிரவில், யாத்திராகமத்திலுள்ள அழகான பாடம். நாம் கடந்த இரவில், இஸ்ரவேல் புத்திரர்களை...ல் விட்டோம். இஸ்ரவேல் தன்னுடைய பெயரை இஸ்ரவேல் என்று கொண்டிருப்பதற்கு முன்பு, அவன் எப்படி அழைக்கப்பட்டான்? இந்த வகுப்பிலுள்ள யார் அதற்கு பதிலளிக்க முடியும், இஸ்ரவேல் என்ற பெயர்) அவனுக்குக் கொடுக்கப்படுவதற்கு முன்பு, அந்த ஆவிக்குரிய பெயர் அவனுக்குக் கொடுக்கப்படுவதற்கு முன்பு, அவன் யாராக இருந்தான்? இப்பொழுது, ஒரு பிரசங்கியாரைத் தவிர வேறு யாராவது அதற்கு பதிலளிக்க முடியுமா, ஒரு பிரசங்கியார் தம்முடைய கரத்தை மேலே உயர்த்துவதைக் கண்டேன். சரி, பிரங்கிமார்களாகிய உங்களில் ஒருவரைத் தவிர வேறு யாராவது. (யாரோ ஒருவர், “யாக்கோபு” என்று கூறுகிறார் - ஆசிரியர்.) யாக்கோபு, அது சரியே. அவன் இந்த ஆவிக்குரிய பெயரைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன காரணம், அதற்குக் காரணம் என்ன? யாரோ ஒருவர் எதையோ கூறினார். ஒரு சகோதரன், “தூதனானவரோடு (போராடி) மேற்கொண்டதன் காரணத்தினால்” என்று கூறுகிறார்.) தூதனானவரை மேற்கொண்டான், அவரோடு போராடி, “நீர் என்னை ஆசீர்வதிக்குமட்டும், நான் உம்மைப் போகவிடேன்” என்றான். ஏய், இன்றிரவு உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய பெயர் வேண்டுமா? அப்படியானால், நீங்கள் அப்படியே பரிசுத்த ஆவியானவரைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, “கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்கும் மட்டும், நான் உம்மை இந்தக் கூடாரத்தை விட்டுப் போக விடப் போவதில்லை” என்று கூறுங்கள், அப்போது நீங்கள் இங்கிருந்து போகும்போது, காரியங்கள் வித்தியாசமாகக் காணப்படும். யாக்கோபு எவ்வளவு உறுதியாக இருந்தானோ அவ்வளவு உறுதியாக நீங்களும் இருந்தால், நீங்கள் ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். 14மேலும், கவனியுங்கள், அவன் அவனுடைய தொடையைத் தொட்ட போது, யாக்கோபு வித்தியாசமாக நடந்தான். ஆமென். அது வீட்டிற்குப் போகும் வழியில் நடந்தது என்று நம்புகிறேன். நீங்கள் தேவனோடு போராடும் போது, நீங்கள் அதற்குப் பிறகு வித்தியாசமாக நடப்பீர்கள். கவனியுங்கள்! பலமுள்ள ஒருவன்... அந்த ஓடையின், அந்தச் சிறு நதியின் மறு கரையில், அவன் பலமுள்ள ஒருவனாகவும், மகத்தான மனிதனாகவும் இருந்தான்; அவன் பின்வாங்கி, தேவனை விட்டுத் தூரமாக இருந்து, தன்னுடைய சகோதரனை விட்டு ஓடிக்கொண்டும், தேவனை விட்டு ஓடிக்கொண்டும் இருந்த போதிலும்; ஆனாலும் அவன் துணிச்சலாகவும் தைரியமுள்ளவனாகவும் இருந்தான். அந்த ஓடையின் மறுபக்கத்தில், அவன் நொண்டி நடந்து கொண்டிருந்த இராஜகுமாரனாக (prince) இருந்தான். “நீ தேவனுக்கு முன்பாக ஒரு இராஜகுமாரனாக இருக்கிறாய், ஒரு இராஜகுமாரனாக, உனக்கு தேவனோடு வல்லமை உண்டு.” நொண்டி நடக்கும் ஒரு இராஜகுமாரன், மேலும் அவன் தன்னுடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நொண்டியே நடந்தான். தேவன் எப்படியாக காரியங்களைச் செய்கிறார்! அவர் அற்புதமானவர் இல்லையா? 15இப்பொழுது, அந்தக் கோத்திரப் பிதாக்கள், நாம் அதை கடந்த இரவில், ஆதியாகமத்தில் விட்டோம், அங்கே தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் கொடுத்த, அந்த நான்கு பேரில் கடைசி (நபர்களாகிய) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோரை விட்டு வந்தோம். தேவனுடைய... அது என்னவாக இருந்தது? கடந்த இரவில், நாம் ஆபிரகாமிடத்தில் தெரிந்து கொள்ளுதல் என்பதைக் கண்டுகொண்டோம், அது இன்றைக்குள்ள கிறிஸ்தவ சபையிடமும் உள்ளது, அதுதான் தெரிந்து கொள்ளுதல். ஈசாக்கினிடத்தில் நீதிமானாக்கப்படுதல். மேலும் யாக்கோபினிடத்தில், கிருபை நீங்கள் யாக்கோபின் ஜீவியத்தை வாசிப்பீர்களானால், நீங்கள் கிருபையில் விசுவாசம் கொண்டாக வேண்டும். அது தெரிந்து கொள்ளுதலாகவும் அழைத்தலாகவும் இருப்பதை நீங்கள் காண வேண்டியிருக்கிறது, ஏனென்றால், ஓ, அந்த மனிதன் செய்த காரியங்கள்! ஆனால், இருப்பினும், தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை தேவன் அவனிடம் கூறியிருந்தார். அவ்விதமாய் அவர் அவனை அழைத்தார். ஆனால் அவன் இந்த தூத னானவரோடு போராடின பிறகு, காரியங்கள் வித்தியாசமாக காணப்பட ஆரம்பிப்பதை நீங்கள் கவனிக்கலாம். அதன்பிறகு அவன் பார்வோனுக்கு முன்பாக போன போது, அவன், நான் பரதேசியாய்ச் சஞ்சரித்தது அநேக வருஷங்கள் என்றான். அவன் பரதேசியாக மட்டுமே இருந்தான் என்பதை அவன் அறியும்படி தேவன் செய்தார். இப்பொழுது, யோசேப்பினிடத்தில், பரிபூரணம். 16மூன்று கட்டங்களைக் கவனியுங்கள். விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல், இரத்தத்தின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். அதன் பிறகு பரிபூரணம், மகிமையடைதல். வேதாகமம், “எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத் தியுமிருக்கிறார்” என்று கூறுகிறது, இது ஆவிக்குரிய சிந்தைக்கு. அது சரிதானா? “அவர் நீதிமானாக்கினவன்.” அப்படியானால், இப்பொழுது அவர் நம்மை நீதிமான்களாக்கியிருப்பாரானால், நாம் ஏற்கனவே அவருடைய நிலையில் மகிமைப்படுத் தப்பட்டு விட்டோம். அவர் - அவர் மகிமைப்படுத்துவார்“ என்றல்ல. அவர், மகிமைப்படுத்தியிருக்கிறார்!” சொல்லுங்கள், அது ஆழமாக இருக்கிறது, இல்லையா? ஆனால் அதைத் தான் வேதவாக்கியம் கூறுகிறது. 17தேவன் ஆபிரகாமிடம், நான் உன்னை ஆசீர்வதித்து, உன்னை தகப்பனாக ஏற்படுத்தியிருக்கிறேன்“ என்றார். தகப்பனாக ஏற்படுத்துவேன்” என்றல்ல. “நான் தகப்பனாக ஏற்படுத்தியிருக்கிறேன்! நான் உன்னை அவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறேன். நீ முதிர்வயதிலே என்னிடம் வருவாய். நீ இரட்சிக்கப்படப் போகிறாய். நான் ஏற்கனவே அதைச் செய்து விட்டேன், நான் ஏற்கனவே அவ்வாறு கூறிவிட்டேன். உனக்கு அதனோடு செய்வதற்கு எதுவுமே கிடையாது, அது நிபந்தனையற்றது” என்றார். தேவன் தம்முடைய சபையைக் கொண்டிருக்கும்படியாக தீர்மானித்து விட்டார். இந்நிலையில், அவர் மனிதனோடு உடன்படிக்கை செய்கிற ஒவ்வொரு முறையும், மனிதன் தன்னுடைய உடன்படிக்கையை முறித்துப் போடுகிறான், அவன் இன்றைக்கும் இப்போதுங்கூட அவ்விதமே செய்கிறான். மனிதன் எப்போதுமே தேவனோடுள்ள தன்னுடைய உடன்படிக்கையை முறித்துப் போடுவான், ஆனால் மனிதனோடுள்ள தம்முடைய உடன்படிக்கையை தேவனால் உடைத்துப்போட முடியாது. எனவே, நான் செய்வேன்!“ 18அவர் ஆதியிலே ஆதாமிடம் கூறின போதுள்ளதை அங்கே பின்னால் நீங்கள் கவனித்துப் பாருங்கள், அவர், இப்பொழுது, இதைச் செய்யாதே, நீ இதைச் செய்யலாம், மேலும் அதைச் செய்யாதே“ என்று கூறினார். ஆதாம் சரியாக மறுபக்கம் திரும்பி, அதை உடைத்துப் போட்டான். ஆனால் பிறகு அவன் இழக்கப்பட்டுப் போனதை தேவன் கண்டு, அவர், ”நான் பகை உண்டாக்குவேன், உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் தலையை நசுக்குவார், அல்லது அவர் நசுக்குவார், அவனுடைய -அவனுடைய தலை உன்னுடைய குதிங்காலை நசுக்கும்“ என்றார். 19இப்பொழுது, “நான் செய்வேன்,” தேவன் எதையாகிலும் செய்வார் என்று அவர் கூறும்போது, அது செய்யப் படும்படியாக நீங்கள் அதற்காக எதிர்நோக்கலாம். மனிதன் தான் எதையாகிலும் செய்வான் என்று அவன் கூறும்போது, அதைக் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “நான் உன்னையும், உனக்குப் பிறகு உன் சந்ததியையும் இரட்சிப்பேன்” என்றார். ஆபிரகாமை மட்டுமல்ல, ஆனால் ஆபிரகாமுடைய சந்ததியார் எல்லாரையும் இரட்சிப்பதாக. நிபந்தனையற்றது! சொல்லுங்கள், நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால், என்னால் கொஞ்சம் சத்தமிட முடியும் என்று நம்புகிறேன். கவனித்துப் பாருங்கள்! ஓ, ஜனங்களே, அதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஒருக்கால் உங்களில் சிலர் அதற்குள் செல்ல போதுமான அளவு ஆழமாக அதை ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. 20தேவன் ஏற்கனவே தம்முடைய சபையை மகிமைப் படுத்தி விட்டார். அவர் எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை கிறிஸ்துவுக்குள், சபைக்குள் மகிமைப்படுத்தியுமிருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டிருப்பீர்களானால், தேவனுடைய பார்வையில், நீங்கள் ஏற் கனவே, கிறிஸ்துவுக்குள் மகிமைப்படுத்தப்பட்டு விட்டீர்கள். இயேசு, ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்“ என்றார். உங்களால் எப்படி பூரண சற்குணராயிருக்க முடியும்? ஆனால் இன்றிரவு கிறிஸ்துவினுடைய பார்வையில், மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் பூரண சற்குணராயிருக்கிறான். கிறிஸ்து எவ்வாறு பூரண சற்குணராயிருந்தாரோ, அதுபோல, நானும் தேவனுக்குள் பூரண சற்குணராயிருக்கிறேன், நீங்களும் கூட பூரண சற்குணராயிருக்கிறீர்கள், மற்ற ஒவ்வொரு விசுவாசியும் அவ்வாறே இருக்கிறான். அது என்னுடைய பரிசுத்தமல்ல, அது அவருடைய பரிசுத்தமாயுள்ளது. தேவனால் என்னுடைய பரிசுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, எனக்கு எந்த பரிசுத்தமும் கிடையாது. ஆனால் நான் விசுவாசத்தினாலே, கிறிஸ்துவுக்குள் வருகிறேன். மேலும், கிறிஸ்துவின் மூலமாக, நான் அவருக்குள் இருந்து, தேவனுடைய பார்வையில் பூரண சற்குணராயிருக்கிறேன். 21கவனியுங்கள்! “நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, இந்த சரீரத்தின் அங்கத்தினர்களாக ஆகியிருக்கிறோம்.” ரோமர் 81ல், “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று (கூறப்பட்டுள் ளது). கிறிஸ்து இயேசுவுக்குள்ளிருக்கிற ஒரு மனிதன் ஆவியின்படியே நடக்கிறான். உலகத்திற்கோ, அதனுடைய மாம்ச சிந்தைக்கோ, அது பைத்தியமாயிருக்கிறது. ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்கோ, அது நித்திய ஜீவனாக இருக்கிறது. ஆமென். அங்கே தான் காரியம். ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது! அப்படியானால் எது உங்களுக்கு தீங்கு செய்ய முடியும்? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்களே! தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, நாம் கிறிஸ்து வுக்குள் வருவோம். ஆமென். ஆமாம், நாம் கிறிஸ்துவுக்குள் வந்தாக வேண்டும், தேவன் அதை வாக்குப்பண்ணியிருக்கிறார். அந்த சரீரமானது மேலே எழுந்தருளிப்போனது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நான் அந்த சரீரத்திற்குள் இருந்து, அதனோடு கூட போயாக வேண்டும். 22இப்பொழுது, “அப்படியானால், சகோதரன் பிரன்ஹாமே, நித்திய பாதுகாப்பில் உமக்கு விசுவாசம் உண்டா ?” என்று கேட்கலாம். ஒருவிதத்தில், நான் அதை விசுவாசிக்கிறேன். சபையானது நித்திய பாதுகாப்போடு இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன், சபை அவ்வாறு இருக்கிறது. அது அவருக்கு முன்பாக, கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் வெளிப்படும் என்பதாக தேவன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார், சபையானது அவ்விதமாக வெளிப்படும். இப்பொழுது, அடுத்த காரியமாக, நீங்கள் அந்த சபைக்குள் இருப்பீர்களானால், நீங்கள் சபைக்குள் இருப்பதால், பாதுகாப்பாயிருக்கிறீர்கள். 23“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவ தில்லை.” அது சரிதானா? கவனியுங்கள், அதைக் குறித்துள்ள அந்த மனிதருடைய வார்த்தை இதோ இருக்கிறது, பரிசுத்த யோவான் 5:24ல், இயேசு கிறிஸ்து, “அவன்,” அது யாராக இருந்தாலும், என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு (நிகழ் காலம்“ (என்று கூறியிருக்கிறார்.) அது வெறுமனே ஒரு கூட்டத்திலிருந்து வேறொரு கூட்டம் வரை அல்ல. நித்தியஜீவன்! அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல்,” அல்லது ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், அவன் ஒருபோதும் புறம்பே தள்ளப்படுவதில்லை, மரணத்தை விட்டு நீங்கி (கடந்த காலம்), ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.“ பரிசுத்த யோவான் 5:24ல் இயேசு அவ்விதமாய் கூறியிருக்கிறார். ”நானே பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள், ஆனால் என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசி நாட்களில் எழுப்புவேன்.“ அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். 24இப்பொழுது, அங்கு உள்ளே (இருப்பதாக பாசாங்கு செய்து நடிக்கும் அநேகர் அங்கே இருக்கிறார்கள். தாங்களாகவே போராடிக்கொண்டும், சரியான விதமாக ஜீவிக்க முயற்சித்துக் கொண்டும், அதற்குள் உந்தித்தள்ள (press in) முயற்சித்துக் கொண்டும் இருக்கிற அநேகர் அங்கே உண்டு. அதைக் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அங்கே உள்ளே இருப்பார்களானால், எந்த ஜீவியத்தையும் செய்வது எவ்வளவு எளிதோ அவ்வளவாக கிறிஸ்தவ ஜீவியத்தையும் செய்வது எளிதாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள், மேலும் முழுவதுமாக பரிசுத்த ஆவியானவர் தான் உங்களை வழிநடத்தி, உங்க ளுக்கு வழிகாட்டிக் கொண்டு, உங்களை நடத்திக் கொண் டிருக்கிறார். வேறு எதுவும் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கவில்லை . மேலும், ஏன், நிச்சயமாக நீங்கள் தவறிழைப்பீர்கள், விழுந்தும் போவீர்கள், ஆனால் தொடர்ந்து அதே விழுந்து போன நிலையில் உங்களால் இருக்க முடியாது, ஏனென்றால், உங்களால் ஒரு - ஒரு சோளத்தண்டை ஒரு-ஒரு காட்டத்தி மரமாக ஆக்க முடிவதைக் காட்டிலும் அதிகமாக அல்ல. உங்களால் அதைச் செய்ய முடியாது. இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீ ர்கள்” என்றார். நீங்கள் நித்திய ஜீவனைக் கொண் டிருக்கிறீர்கள். 25இன்று சபையின் மேலுள்ள மிகப்பெரிய சாபங்களில் ஒன்று பயமாக இருக்கிறது. எல்லாருமே மரணத்திற்குப் பயப்படுகின்றனர், அது, “என்ன நடக்கப் போகிறதோ, யாருக்கு நடக்கப் போகிறதோ, என்னவோ?” என்று பயப்படு கிறார்கள். ஏன், இயேசு, “இவைகள் சம்பவிக்கும் போதும், பயங்கரமான தோற்றங்கள் (fearful sights) உண்டாகும் போதும் கூட, உங்கள் மகத்தான மீட்பு சமீபமாயிருப்பதால், உங்கள் தலையை உயர்த்தி, களிகூருங்கள்” என்று கூறி யிருக்கிறார். 26இப்பொழுது, அவர் எப்படியாக சபையை அந்தப் பிரயாணத்தினூடாக வழிநடத்திக் கொண்டு சென்றிருக்கிறார்! அங்கே எப்படியாக பின்னால், ஆபிரகாமிடத்திலும், ஈசாக்கினிடத்திலும், யாக்கோபினிடத்திலும், மற்றும் அவர்கள் எல்லாரிடத்திலும் கூட, அவர்களிடம் இருந்த தவறுகளைப் பாருங்கள், ஆனால் தேவனோ அவர்களோடு இருந்தார். அது ஒரு நிழலாக இருக்கிறது. ஒரு நிமிடம் ஆபிரகாமைக் கவனித்துப் பாருங்கள். இன்றிரவு கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிற ஆர்மீனியர்கள் ஏராளமானோர் எனக்கிருக்கிறார்கள் என்பது எனக்கு - எனக்கு - எனக்குத் தெரியும், ஆனால் நான் -நான் இதை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - நான் அவ்வாறு செய்ய விரும்புகிறேன். தெரிந்து கொள்ளுதலின் மூலமாகவும் கிருபையின் மூலமாகவும், தேவன் ஆபிரகாமிடம், “நான் உன்னை முதிர் வயதிலே என்னிடத்தில் கொண்டு வரப் போகிறேன்” என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் உன்னை இரட்சிக்கப் போகிறேன். நான் உன்னை இதனூடாக வழி நடத்தப் போகிறேன். நீ நீடித்த நாட்கள் வாழப் போகிறாய். நீ ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய்... இல்லை. சாராளுக்கு குழந்தையில்லை; நீ போ, நீ ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாய். அந்த பிள்ளைக்குள், நான் உலகத்தை இரட்சிக்கப் போகிறேன்” என்று கூறினார்). இப்பொழுது, ஆபிரகாம் அதற்குத் தகுதியாகும்படி ஒரு காரியத்தையும் செய்யும் முன்பே, ஆனால் அவர் அப்படியே வெறுமனே... தேவன் அவனை அழைத்தார். அவ்வளவு தான். 27அவன் வெறுமனே அங்கே ஊர் என்கிற பட்டணத்திலிருந்த ஒரு கல்தேயனாக இருந்தான், அவன் பாபேல் கோபுரத்திலிருந்து, விக்கிரக வழிபாட்டை விட்டு சிநெயார் பள்ளத்தாக்குகளுக்குள் இறங்கி வந்திருந்தான். அவனுடைய தகப்பனார் விக்கிரக ஆராதனை செய்பவராக இருந்தார் என்று நினைக்கிறேன். லாபானும் விக்கிரக வழிபாடு செய்பவன் என்று நினைக்கிறேன், அவன் அங்கே போன பிறகு, அதை நிரூபித்தான், அவனிடம் அந்த விக்கிரகங்கள் இருந்தது. அவன் பாபேல் கோபுரத்தை விட்டு வந்திராவிட்டால், அவன் அந்த விக்கிரகங்களை எங்கிருந்து பெற்றிருக்க முடியும்? காமுடைய ஜனங்களிலிருந்து நிம்ரோத் வந்திருந்தான். நிம்ரோத் பாபேல் கோபுரத்தைக் கட்டினான், அது விக்கிரக வழிபாடாக இருந்தது, பூமியிலேயே முதலாவது விக்கிரக வழிபாடு அதுதான். 28இப்பொழுது, அந்த பாபேல் கோபுரம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கவனியுங்கள், பாபேல், அது அங்கே அதனூடாக தொடர்ந்து வந்து, இங்கே வெளிப் படுத்தின விசேஷத்தில் முடிவடைகிறது; ஒரு கிறிஸ்தவ, பக்தியுள்ள விக்கிரக ஆராதனையாக அது இருக்கிறது, கிறிஸ்தவமாக இருப்பதாக பாவனை செய்து கொண்டிருத்தல் (pretending). ஓ! யோவான் அவளை வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் கண்டு, அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டான், அவள் எவ்வாறு உட்கார்ந்திருந்தாள் என்றும், எவ்விதமாக காணப்பட்டாள் என்றும், இயேசுவின் நாமத்தையும் மற்ற எல்லாவற்றையும் தரித்துக்கொண்டு, இன்னுமாக ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களை உபத்திரவப்படுத்தி, அவர்களை இரத்த சாட்சிகளாக கொன்று போட்டாள். தூதன், “இங்கே வா, அவள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன். அவள் அநேக, ஏழு மலைகளின் மேலிருக்கிற ஒரு மகா சபையாக இருந்து, அவள் பூமியையும் மற்றவைகளையும் ஆளுகை செய்கிறாள். அவள் எப்படியாக கிறிஸ்துவின் இரத்த சாட்சிகளின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்தாள் (drank)!” என்று கூறினான். ஓ, இரக்கம்! 29ஜனங்களே, நாம் கடைசி நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அநேக வருடங்களுக்கு முன்பு, இங்கே நான் அந்த மிருகத்தின் முத்திரை“ என்பதின் பேரில் பிரசங்கம் பண்ணினதற்காக அவர்கள் என்னை இங்கே வைத்து கைது செய்யப் போவதாயிருந்தனர் என்பதை ஜனங்களாகிய உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? இருபது சொச்சம் வருடங்களுக்கு முன்பு, முதலில் முசோலினி அதிகாரத்திற்கு வரும்போது, நான், ”முசோலினி எப்பொழு தாவது எத்தியோப்பியாவை நோக்கிப் போவான் என்றால், இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், (அது முதல்) இயேசு கிறிஸ்து வரும்வரைக்கும் ஒருபோதும் அங்கே சமாதானமே இருக்காது என்று கூறின போது. மேலும் நான், “அங்கே மூன்று மகத்தான கொள்கைகள் (இஸம்கள்) இருக்கும், அவை கம்யூனிஸம், பாசிசம், நாசிசம் ஆகியவையாகும். அவைகள் ஒரே இஸத்தில் முடிவடைந்து, அந்த ஒரு இஸமே உலகத்தில் ஆதிக்கம் செலுத்தி, வத்திக்கான் பட்டணத்தையே சுட்டெரித்துப் போடும்” என்றேன். அநேக அநேக அநேக வருடங்களுக்கு முன்பு, நான் அவ்வாறு கூறினது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அப்படியே முற்றிலும் அதேவிதமாக! நான், அந்த நேரம் வருவதற்கு சற்று முன்பு, மோட்டார் வாகனங்கள்.“ என்றேன். இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே, முதுகு பாகம் வளையாமல் நேராக இருக்கும் (இருக்கைகளை) உடைய அந்தப் பழைய மோட்டார் வாகனங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. எப்படியும் இருபது வருடங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மேலும் நான், ”அவைகள் ஒரு முட்டையைப் போன்று காணப்படும். அவைகள் அந்த வடிவத்தில் காணப்படும். அது ஒரு தரிசனமாகும். அதே போன்ற ஏதோ வடிவத்திலுள்ள ஏதோவொன்றாக இருக்கும்“ என்றேன். எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு சற்று முன்பு, அவை கள் அவ்விதமாகத்தான் இருக்கும். 30ஆனால் தேவனோ சரியாக இப்பொழுதே சபையை எல்லாவிடங்களிலும் கட்டவிழ்த்து விடுவித்து, ஒரு ஒழுங்கில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுதுதான் அவர் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குள் அவைகளை கொண்டுவர முடியும், அது எடுத்துக்கொள்ளப்படுதலில் போகக்கூடும் முன்பாக, அதற்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை அவர் கொடுத்தாக வேண்டும். ஜனங்களோ கடைசி காலத்தினுடைய ஆவியில் இருக்கிறார்கள், நோவாவின் நாட்களில், ஜனங்கள் புசித்து, குடித்து, பெண்கொண்டு, பெண்கொடுத்து, சிரத்தை அற்றவர்களாயும், அக்கறையில்லாதவர்களாயும், அலைந்து திரிகிறவர்களாயும், மற்ற எதுவுமாகவும் இருந்தது போன்றே இவர்களும் இருக்கிறார்கள். பூமியின் மேலுள்ள ஜனங்களிலேயே இந்த அமெரிக்க ஜனங்கள் படுமோசமானவர்கள்! இவர்கள் துணிகர முள்ளவர்களாகவும், இறுமாப்புள்ளவர்களாகவும், இச்சையடக் கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், பகைக்கிற வர்களாயும், மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறவர்களாயும் இருக்கிறார்கள். அங்கே உலகத்தில் ஏதாவது இடத்தில்... எனது வேதாகமத்தை என்னுடைய இருதயத்தின் மேல் வைத்து, நான்... என்று தேவன் அறிவார். அவர் கீழே என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். காலை வருவதற்கு முன்னமே நான் அவருக்கு முன்பாக நிற்க வேண்டியிருக்கலாம் என்பதை அறிந்தேயிருக்கிறேன். நான் அவ்விதமாக கூற வேண்டியிருக்குமானால், உலகத்திலே எந்தவிடத்தைக் காட்டிலும் மிஷனரிமார்கள் அவசியம் தேவைப்படும் மிகவும் மோசமான இடம் அமெரிக்கா தான், இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் தான். எனக்குத் தெரிந்த எந்தவிடத்திலும் பெருங் கூட்டம் அஞ்ஞானிகள் இருக்கும் இடம் அமெரிக்காவில் தான் உள்ளது. அஞ்ஞானி என்பதற்கு அவிசுவாசி“ என்று அர்த்தம். 31ஓ, அவர்கள் வேதசாஸ்திரத்தை நம்புகிறார்கள். உங்களால் அவர்களிடம் எந்தவிதத்திலும் பேசவே முடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் உணர்வற்று மரத்துப்போனவர்களாகவும் drug back ஆகவும் இருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து செயலிழந்து போனவர்களாய், பிணத்தை நறுமண மூட்டி பாதுகாத்து வைக்கும் இந்தத் திரவத்தில் நிறைய கொண்டிருந்து, அவனுடைய ரத்த நாளங்களுக்குள் கெடாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும், ஏதோ அதிதீவிர பழமைவாதியாக இருந்து, ஒரு கிறிஸ்தவன் என்று கூறிக் கொண்டிருக்கும், ஒரு மனிதனோடு உங்களால் செய்ய முடிவதைக் காட்டிலும், அங்கே வெளியே, ஒரு விக்கிரகத்தைத் தொழுதுகொண்டு, தேவனைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒரு மனிதனை நான் எடுத்து, அவனோடு அதைக் காட்டிலும் அதிகமாக ஐந்து நிமிடங்களில் என்னால் செய்ய முடியும். இறுதிச் சடங்கு செய்யும் ஒரு இடத்தைப் (undertaker establishment) போன்று இங்கு எங்கோவிருக்கும் பழைய குளிர்ந்து போன அந்தப் பிணவறைகளில் ஒன்றை அது எனக்கு நினைப்பூட்டுகிறது. அது சரியே. அங்கே சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, உள்ளே சென்று, ... வைத்து. நான் அந்தப் பழைய, பெரிய சபைகளுக்குள் போகும்போது, அது ஒரு - ஒரு பிணவறையை தான் எனக்கு நினைப்பூட்டுகிறது. ஆவிக்குரிய உஷ்ணமானி பூஜ்ஜியத்துக்கு கீழே நூறுக்குப் போய் விட்டது. நீங்களாகவே ஏறக்குறைய கஷ்டப்பட்டு அதற்குள்ளே நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. நான் ஒரு நகைச்சுவைக்காக அதைக் கூறிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது சத்தியமாக உள்ளது. அவர்களில் சிலருக்கு தேவனைக் குறித்து அதிகமாக எதுவும் தெரியாது, அவர்கள் அங்கே எழுந்து நின்று, “நல்லது, இப்பொழுது, நான் உன்னிடம் கூறுகிறேன், இதெல்லாவற்றையும் தான் நான் விசுவாசிக்கிறேன்.. என்று கூறுகிறார்கள். என்னே, நல்லது! ஏன், நீ மனிதரை வஞ்சிக்கிறவன், நீ தேவனுடைய இராஜ்யத்துக்குப் புறம்பே இருந்து விட்டு, மற்றவர்களையும் புறம் பாக்கும்படி போதிக்கிறாய். மரித்துப்போன ஒரு மனிதனை ஒரு பிணவறைக்கு எடுத்துச் செல்வது போல, அவர்கள் கொஞ்சம் திரவத்தை உட்செலுத்துகிறார்கள். அவர்கள் - அவர்கள் அவனுடைய இரத்தம் எல்லாவற்றையும் வெளியே எடுத்து விட்டு, அவன் மரித்து விட்டான் என்பதை நிச்சயப்படுத்தும்படியாக அங்கே உள்ளே ஏதோவொன்றை உட்செலுத்துகிறார்கள். நல்லது, அவர்கள் ஏறக்குறைய அந்த விதமாகத்தான் செய்கிறார்கள். ஜனங்கள் பெற்றிருக்கிற கொஞ்சம் மார்க்கத்தையோ அல்லது அவர்கள் பெற்றிருக்கிற கொஞ்சம் விசுவாசத்தையோ எடுத்து, கொஞ்சம் பழைய, மற்றும் - மற்றும் வேதசாஸ்திரத்தை அவர்களுக்குள் உட்செலுத்தி, அவர்களை மிக மோசமாக கொன்று போட்டு, அவர்களை மரித்த நிலையிலேயே வைத்து விடுகிறார்கள். அவ்வளவு தான். அது சரியே. பயங்கரம்! என்னே! அதன்பிறகு அவர் கள், ”ஓ!“ என்று கூறுகிறார்கள். 32நான் ஒரு பெண்மணியிடம், “நீ ஒரு கிறிஸ்தவளா?” என்று கேட்டேன். அவள், “நான் உமக்குப் புரிய வைக்கிறேன், நான் ஒரு அமெரிக்கப் பெண்” என்றாள். அதற்கு நான், “நான் உன்னிடம் கேட்டது அதுவல்ல” என்று கூறினேன். வேறொருவள் மேலே மேடைக்கு வந்து, சொன்னாள், சகோதரன் போஸ்வர்த், “சீமாட்டியே, நீ ஒரு கிறிஸ்தவளா?” என்று கேட்டார். அவள், “ஏன், மிகவும்... நல்லது, உங்களுக்குப் புரியும்படி சொல்லுகிறேன், நான் ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்” என்றாள். ஓ, என்னே! ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டால், அது உங்களை ஒரு கிறிஸ்தவனாக ஆக்கி விடுமா? நீங்கள் முழு, உலகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றலாம், அது ஒரு போதும் உங்களுக்கு உதவி செய்யாது. கொழுந்து விட்டெரியும் பரிசுத்த ஆவியின் அக்கினி பாவத்திலிருந்து உங்கள் ஆத்துமாவை சுத்திகரிக்கும் மட்டுமாக, நீங்கள் இன்னும் ஒரு பாவியாகவே இருக்கிறீர்கள்! அது இருதயத்திற்குள் இருக்கிறது. “நல்லது, நான் அமெரிக்காவில் வசிக்கிறேன்.” நல்லது, அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. அது உங்களுக்கு எதையும் செய்தில்லை. நான் ஒரு அமெரிக்கனாக இருக்கும் காரணத்தினால், தேவன் எனக்கு மரியாதை செலுத்த மாட்டார். அவன் ஒரு ஜெர்மானியனாக இருக்கும் காரணத்தினால், தேவன் ஒரு ஜெர்மானியனைக் கனம் பண்ணுவதில்லை, அல்லது போலந்து தேசத்திலிருந்து வந்த ஒரு - ஒரு போலந்தியனாக இருக்கிற காரணத்தினால், தேவன் அவனை கனம் பண்ண மாட்டார். அவன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த காரணத்தினால், ஒரு ஆப்பிரிக்கனை தேவன் கனம் பண்ணுவதில்லை. தேவன் ஆப்பிரிக்காவிலோ, ஜெர்மனியிலோ, அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலோ அக்கறை உள்ளவரல்ல. தேவன் ஒரு இராஜ்யத்தில் தான் அக்கறை உள்ளவராயிருக்கிறார். அதுதான் தேவனுடைய இராஜ்யம், சகல தேசங்களிலுமிருந்தும் மனிதன் அதற்குள் வருகிறான். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாகிய இயேசு கிறிஸ்து மூலமாக அதற்குள் பிறந்து, வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளிகளாய் இருக்கிறார்கள். 33வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசமும் சாத்தானால் ஆளுகை செய்யப்படுகிறது. வேதாகமம் அவ்வாறு கூறியுள்ளது. பையா, அது மூச்சு திணறச்செய்யும் ஒரு காரியத்தை வைக்கிறது, அது அவ்வாறு செய்யவில்லையா? சாத்தான் இயேசு கிறிஸ்துவை மேலே கொண்டு சென்று, உலகத்தின் சகல இராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்தான். அது சரிதானா? அவன், “இவைகள் என்னுடையவைகளாக இருக்கின்றன, எனக்கு விருப்பமானதை அவைகளுக்குச் செய்வேன். நீர் சாஸ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், நான் அவைகளை உமக்குத் தருவேன் என்றான். அதற்கு இயேசு, “அப்பாலே போ, சாத்தானே!” என்றார். பாருங்கள்? இயேசு தாம் அந்த இராஜ்யங்களுக்கு சுதந்தரவாளியாகப் போகிறார் என்பதை அறிந்திருந்தார். 34இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்தில், உலகத்தின் முடிவு வரும்போது, வேதாகமம், “பரலோகமே, பரிசுத்தவான்களாகிய சகல தீர்க்கதரிசிகளே, களிகூருங்கள், இந்த உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ஆளுகை செய்து இராஜ்யபாரம் பண்ணுவார்” என்று கூறுகிறது. மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்து, சிலையின் பாதத்தில் மோதி, அதை நொறுக்கிப் போட்ட ஒரு கல்லாக தானியேல் அவரைக் கண்டான், பிறகு தேவனுடைய இராஜ் யம் வளர்ந்து பெருகினதாக அவன் கண்டான். ஆயிரவருட அரசாட்சியில், கிறிஸ்து ஆளுகை செய்யும்போது, அங்கே எந்த வியாதியோ, எந்த துக்கமோ இருக்காது. ஒவ்வொரு, எல்லா ஆயுதங்களையும் மண்வெட்டிகளாக அடிப்பார்கள், இனி நாம் யுத்தத்தைக் கற்பதுமில்லை. அவ்வளவு தான். இயேசு வரும்போது, அதெல்லாம் முடிவடைந்து விடும். அதுவரையில், சாத்தான் தேசங்களை ஆளுகை செய்து கொண்டிருக்கும் காலம் வரையில், இயேசு வரும்வரையில், யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் இருக்கும். ஆமென். 35தேவனே, எங்களுக்கு உதவி செய்யும்! நான் இன்றிரவு உங்களைப் பார்த்து, கவனித்து, இங்கே நின்று கொண்டு தேவனுடைய வார்த்தையிலிருந்து போதிக்கையில், நீங்கள் நித்தியத்தோடு சம்பந்தப்பட்ட ஜனங்களாக இருக்கிறீர்கள். இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு மனிதனும் பெண்ணும், பையனும் சிறு பெண் பிள்ளையும், ஏதோவொரு நாளில், கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தில் நிற்கப் போகிறீர்கள். அவருடைய ஊழியக்காரனாக, நான் உங்களுக்கு முன்பாக சொன்னவைகளுக்காக நான் பதில் கூறியாக வேண்டியிருக்கும். நான் ஏன் தேவனுடைய சத்தியத்தை உங்களிடம் சொல்லாமல் விலக்குவேன்? நான் பிரசங்கம் பண்ணியிருக்கிற வார்த்தையை, அவர் அதை உலகத்தைச் சுற்றிலும் எடுத்துச்சென்று, மன்னர்களின் அரண்மனைகளிலும் மற்றும் எல்லாவிடங்களிலும் அதைக் கனம்பண்ணி, அவர் அதைச் சொன்ன விதமாக மிகச்சரியாக இருந்ததே தவிர (வேறு எதையும் அவர் ஒருமுறையும் கூறியிருக்கவில்லை என்னும் அளவுக்கு தேவன் அதை மிகவுமாக கனம் பண்ணியிருப்பாரென்றால், அவர் நிச்சயமாகவே தவறாயிருக்கும் எதையும் நான் கூறும்படி அனுமதிக்கவே மாட்டார். எனது கிறிஸ்தவ நண்பனே, நான் இன்றிரவு இதைக் கூறிக் கொண்டிருக்கிறேன், நீ எந்த சபையைச் சேர்ந்தவனாயிருந்தாலும், நீங்கள் எந்தவிடத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் காரியமில்லை, நீ தேவனுடைய இராஜ்யத்திற்குள் இல்லை என்றால், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக, கிறிஸ்துவினுடைய சரீரத்திற்குள் உங்களைக் கொண்டு வந்து, இப்பொழுதே உங்களை உள்ளே நெருக்கிக் கொண்டேயிருங்கள், அவர் வரும் வேளை எதுவென்று உனக்குத் தெரியாது. 36இப்பொழுது அங்கே எகிப்திலிருந்த இஸ்ரவேலர், வெளியே அழைக்கப்பட்ட சபைக்கு அது முன்னடையாளமாக இருந்தது, யாத்திராகமம் முதலாம் அதிகாரம். யோசேப்புக்குப்பிறகு, இஸ்ரவேலர் எகிப்தில் குடியேறினர். இப்பொழுது சரியாக, சுமார், ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் எனக்கு ஆகும். என்னால் கூடுமானவரையில், அதைக் குறித்து எவ்வளவு தொகுக்க முடியுமோ அவ்வளவு தொகுக்க முயற்சிப்பேன். இப்பொழுது, வறட்சியின் காரணமாக, அவர்கள் எகிப்தில் குடியேறி விட்டனர், ஈசாக்கு கோத்திரப் பிதாக்களை அழைத்துக்கொண்டு அங்கே போயிருந்தான். அவர்கள் அங்கே கோசேனில் வாழ்ந்து வந்தனர். ஆனால் யோசேப்போ, அவன் மரித்த போது, (ஒரு அழகான எடுத்துக்காட்டு இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டுப் போவதைக் குறித்து கூறி, அவனுடைய எலும்புகளைப் பற்றியும் குறிப் பிட்டிருந்தான். கவனியுங்கள். நீங்கள் என்னை மன்னிப்பீர் களானால், நான் இதை ... விட்டுவிட விரும்புகிறேன். 37உங்களுக்குத் தெரியும், நீங்கள் இங்கேயிருக்கும் வார்த்தையை சரியாக இதைப் போன்றே வாசிப்பீர்களானால், அதெல்லாம் சரிதான், ஆனால் நீங்கள் நிச்சயமாகவே அதைக் குறித்த அர்த்தங்களை தவறவிட்டு விடுவீர்கள். வார்த்தையானது வரிகளுக்கு இடையே எழுதப்பட்டுள்ளது. இயேசு , நான் அதை ஞானிகளின் கண்களுக்கும் கல்விமான்களின் கண்களுக்கும் மறைத்து, கற்றுக்கொள்ள விரும்பும் அவ்விதமான பாலகருக்கு அதை வெளிப்படுத்தியிருக்கிறேன்“ என்றார். இந்த வேதசாஸ்திர கல்லூரிகள் அங்கே முற்காலத்தில் இருந்த அந்த ஆசாரியர்களைப் போன்றும், பிரதான ஆசாரியனைப் போன்றும், மற்றும் அவர்கள் எல்லாரைப் போன்றும் இருக்கிறது, அவர்கள் வார்த்தையை வாசித்தனர். ஆனால் இயேசுவே கிறிஸ்துவாக இருந்தார் என்பதைக் காணத் தவறி விட்டனர். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? 38இப்பொழுது இந்தக் கோத்திரப் பிதாக்களைக் கவனியுங்கள். வயதான யாக்கோபு அங்கே எகிப்தில் மரித்த போது, அவன், “நீங்கள் என்னை இங்கே அடக்கம் பண்ண வேண்டாம் என்று ஏன் கூறினான்? அவன் யோசேப்புடைய கரத்தை அந்த முடமான தொடையின் மேல் வைக்கும்படி செய்து, அவனுடைய எலும்புகளை அங்கே அடக்கம் பண்ண வேண்டாம் என்று தேவனைக் கொண்டு ஆணையிட்டுக் கொண்டான். அது உங்களுக்குத் தெரியுமா? அவன், என்னுடைய சொந்த தேசத்துக்கு என்னைத் திரும்பக் கொண்டு சென்று, என்னை அடக்கம் பண்ணி விடுங்கள்” என்றான். 39அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த யோபுவைக் கவனியுங்கள், அவன் தோல் வெடிப்பினால் பாதிக்கப்பட்டு, முழுவதும் பருக்களால் நிறைந்தவனாய், அவன் தான் பிறந்த நாளைச் சபித்தான். வேதாகமத்திலேயே மிகப் பழமையான புத்தகம் யோபு புத்தகம் தான், அது ஆதியாகமத்திற்கு முன்பே எழுதப்பட்டு விட்டது. அவன் அங்கே நின்று கொண்டு, ஒரு ஓட்டைக்கொண்டு தன்னுடைய.... ஐ சுறண்டிக்கொண்டு (combing), வெளியே பின்னால் சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்திருந்திருப்பதைக் கவனியுங்கள். நான் இங்கே ஒருமுறை தொடர்ந்து அதன்பேரில் ஏறக் குறைய மூன்று மாதங்களாக பிரசங்கம் பண்ணினேன். சில ஜனங்கள் எழுதி என்னிடம் கொடுத்து, என்னிடம், “சகோ தரன் பில் அவர்களே, நீர் எப்போது யோபுவை சாம்பல் குவியலை விட்டு எடுக்கப் போகிறீர்?” என்று கூறினார். மேலும் நான் - நான்.... அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்ததைக் குறித்து. அந்த மகத்தான தீர்மானத்தின் நேரத்தில், ஏதோவொன்று செய்யப்பட வேண்டியிருந்தது. ஏதோ வொன்று துவங்கும் அந்த மணி வேளையில். ஆனால் நாம் அவனை அந்த சாம்பல் குவியலை விட்டு எடுத்த போது, என்ன சம்பவித்தது என்று உங்களுக்குத் தெரியும், ஏதோ வொன்று சம்பவித்தது. 40இந்த எழுப்புதலிலும் நாம் அந்த விதமாகத்தான் செய்ய முயற்சிக்கிறோம். நாம் ஜனங்களுடைய கவனத்தைக் கவர்ந்து கிறிஸ்துவை நோக்கி சுட்டிக்காட்டுகிறோம், அதன் பிறகு நீங்கள் அதற்குள் பிரவேசிக்கும் ஒரு கட்டத்தை அடையக் கூடும் வரையில், இந்த நிலையிலேயே பற்றிப் பிடித்துக் கொள்கிறோம். அதுதான் காரியம். அதுதான் பரிசுத்த ஆவியானவர் ஆயத்தப்படுத்துவது. ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் அசைவாடுவதை உணர்ந்து கொள்ளலாம், வாய்க்கால் ஆனது ஆயத்தமாகும் போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். 41கவனியுங்கள், அங்கே யோபு உட்கார்ந்திருந்தான், அவன் துயரத்தில் இருந்தான். அவனுடைய மனைவியும் கூட அவனுக்கு விரோதமாக திரும்பி, நடந்து சென்று, “யோபே, நீர் ஏன் தேவனை சபித்து, ஜீவனை விடக் கூடாது?” என்றாள். அதற்கு அவன், “நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான். இதோ சபை அங்கத்தினர்கள் அங்கே வந்து, ஏழு நாட்களாக தங்கள் முதுகை அவனுக்குத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், என்னவொரு ஆறுதல்! அவர்கள், “யோபே, நீ ஒரு இரகசிய பாவி. நீ பாவம் செய்திருக்கிறாய்” என்றனர். யோபு தான் பாவம் செய்திருக்க வில்லை என்பதை அறிந்திருந்தான். அதைக் குறித்து அவர்கள் என்ன அறிந்திருந்தார்கள் என்பதை காண்பித்து விட்ட னர். 42அவ்விதமாய், அந்தத் துயரத்தில், அவன் ஒரு நீதிமானாக இருந்தான், தேவன் ஒரு பரிசுத்தவானோடு இடைபட்டுக் கொண்டிருந்தார். அவர் எலிகூ என்ற பெயருடைய ஒரு மனிதனை அனுப்பினார். எலிகூ அவனைக் குற்றஞ்சாட்டவில்லை. (யோபு) தேவனைக் குற்றம் சுமத்தின தைக் குறித்து மாத்திரமே எலிகூ அவனிடம் கூறினான். ஆனால் எலிகூ அவனிடம், “இப்பொழுது, யோபே, நீர் இவைகள் எல்லாவற்றையும் கவனித்திருக்கிறீர். இப்பொழுது, பாவியான ஒரு மனிதனுக்கும் பரிசுத்தமான ஒரு தேவ னுக்கும் இடையே இடைவெளியில் நிற்கப் போகிற நீதிபர ராகிய ஒருவர் வருகிறார். அதன்பிறகு அந்த மனிதருக்காக துக்கம் கொண்டாட அவர்கள் கல்லறைக்குப் போவார்கள், அப்போது அது அங்கே இல்லை என்பதைக் காண்பீர், அப்போது அவர் உயிர்த்தெழுந்து விடுவார்” என்றான். அப்போது யோபு அதைக் கேட்டு, அவன் தன்னுடைய காலூன்றி எழுந்து நின்றான். என்னே! அப்போது மின்னல்கள் பளிச்சிட்டன, இடிகள் முழங்கின. அது என்னவாக இருந்தது? அந்த தீர்க்கதரிசி மறுபடியுமாக தேவனுடைய வாய்க்காலுக்குள் திரும்பி வந்தான். என்னே! அவனுடைய கண்கள் திறவுண்டன. அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். கவனியுங்கள், அவர் பூமிக்கு வருவதற்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்!” தொடர்ச்சியாக, “உயிரோடிருக்கிறார்!” “கடைசி நாட்களில்,” கடைசி இரண்டாயிரம் வருடங்களில், அவர் பூமியின் மேல் நிற்பார். இந்தச் சரீரத்தை தோல் புழுக்கள் அழித்துப் போட்டாலும், நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன்; அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும். அங்கே தான் காரியம். அவன் மரிக்க ஆயத்தமான போது, என்னை இங்கே பாலஸ்தீனாவில் அடக்கம் பண்ணுங்கள்“ என்றான். 43அதோடு கூட ஆபிரகாமும் ஒரு வாக்குத்தத்தத்தோடு வந்தான். சாராள் மரித்தாள், அவன் அவளைச் சரியாக யோபுக்கு அருகில் அடக்கம் பண்ணினான், அவன் ஒரே பிரிவாக இருக்கும் நிலத்தை (parcel of ground) விலைக்கு வாங்கி, அவளை அடக்கம் பண்ணினான். ஆபிரகாம் மரித்த போதும், அவன் சாராளுக்கு அருகிலேயே நித்திரை பண்ணி னான். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு மரித்து, அவனும் ஆபிரகாமோடு நித்திரை பண்ணினான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோபும் மரித்தான், அவன் எகிப்தில் வைத்து, என்னை இங்கே அடக்கம் பண்ண வேண்டாம். நீ என்னை இங்கே அடக்கம் பண்ண மாட்டாய் என்று ஆணையிட்டுக் கொடு! என்னுடைய எலும்புகளை எடுத்து அவைகளை அங்கே மேலே என்னுடைய தகப்பனோடு அடக்கம் பண்ணு“ என்றான். ஏன்? ஏன்? சகோதரனே, அது எழுதப்பட்டிருக்கவில்லை , அது வரிகளுக்கு இடையேயுள்ளது. யோசேப்பு, அவன் மரித்த போது, “இப்பொழுது, நீங்கள் என்னுடைய எலும்புகளை இங்கே ஒரு சவப்பெட்டியில் வைத்து விடுங்கள், ஆனால் என்னை இங்கே அடக்கம் பண்ண வேண்டாம். நீங்கள் என்னை இங்கே அடக்க பண்ணாதீர்கள். நீங்கள் என்னை அங்கே மேலே கொண்டு சென்று, மேலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே என்னை அடக்கம் பண்ணுங்கள். என்னை அங்கே மேலேயே அடக்கம் பண்ணுங்கள்” என்றான். ஏன்? “தேவன் என்றாவது ஒருநாள் உங்களை சந்திக்கப் போகிறார். நான் ஏதோவொன்றைக் குறிப்பிடும்படியாக என்னுடைய எலும்புகளை இங்கே விட்டுச் செல்கிறேன்” என்றான். 44யோசேப்பு தன்னுடைய எலும்புகளை விட்டுச் சென்றது போல, அவ்விதமே இயேசுவும் ஒரு திறந்த கல்லறையை விட்டுச் சென்றிருக்கிறார்! வயதான ஒவ்வொரு எபிரேயனும், அவனது முதுகில் அடிக்கப்பட்டு, களைப்போடும் சோர்வோடும் இருந்து, அங்கே தள்ளாடி நடந்து கொண்டிருக்க, அந்த எகிப்தியர் எல்லாரும் அந்தச் சிறிய பழைய சவப்பெட்டியை நோக்கிப் பார்த்தார்கள். நான் இங்கே சமீபத்தில் அதை பார்க்க வேண்டியிருந்தது, அது ஒரு சிறிய பழைய ஈயத்தினாலான சவப்பெட்டியாக இருந்தது, அது ஒரு சிறந்த காரியமாக இருந்தது. அங்கே தான் அவனுடைய எலும்புகள் வைக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அதை அங்கேயிருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள், நான் அதைப் பார்த்தேன், அவர், மோசே அவைகளை எடுத்து தூக்கி தன்னோடு கூட அவைகளை எடுத்துக் கொண்டு சென்ற போது, அங்கே தான் யோசேப்புடைய எலும்புகள் வைக்கப்பட்டிருந்தது“ என்றார். ஒவ்வொரு எபிரேயனும் அங்கே உள்ளே நோக்கிப் பார்த்து, என்றாவது ஒருநாள் இது இங்கே மாறத்தான் போகிறது. நாம் வெளியே (போகப்) போகிறோம்” என்றனர். நாம் கடந்த இரவு பாடத்தில் கொண் டிருந்தது போல, அந்த தீர்க்கதரிசியை, ஒவ்வொரு விதத் திலும் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தின அந்த அழ கான அங்கியை அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் சொன்னான்!“ ஏனென்றால் தேவன் ஆபிரகாமிடம் என்ன கூறியிருந்தார் என்பதைக் குறித்த நம்பிக்கையில் நிச்சய முடையவனாயிருந்தான். அங்கே தான் காரியம். 45நான் இன்றிரவு இன்னுமாக அதே காரியத்தில், தேவன் ஆபிரகாமிடத்தில் என்ன கூறினார் என்ற காரியத்தில், நான் உன்னையும் உன்னுடைய சந்ததியையும் இரட்சிப்பேன் என்ற காரியத்தில் நம்பி சார்ந்திருக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். என்றாவது ஒருநாள் நீங்கள் இங்கிருந்து போவீர்கள்,“ அவர்கள் அதை விசுவாசித்தார்கள். ஒருநாள், வயதான யோசேப்புடைய எலும்புகள்..... மோசே போகத் துவங்கினான், அப்போது பரிசுத்த ஆவியானவர் அவனிடம் பேசி, “மோசே, நீ ஒரு காரியத்தை மறந்து விட்டாய். போய் யோசேப்புடைய எலும்புகளை எடுத்துக்கொள்” என்றார். மோசே அவைகளை பொதிந்து எடுத்துக்கொண்டு (wrapped up), இதோ அவன் வருகிறான். அக்கினிஸ்தம்பமானது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி அவனை வழிநடத்திக் கொண்டு வந்தது, அவன் அவைகளை (யோசேப்பின் எலும்புகளை) ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு பக்கத்தில் அடக்கம் பண்ணினான். ஏன்? நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்நாட்களில் ஒன்றில், அங்கே ஒரு உயிர்த்தெழுதல் வரும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்தி ருக்கிறேன்” என்று யோபு கூறின நீதிபரரை அவர்கள் அறிந்திருந்தார்கள். அங்கே அவர் (மீட்பர்) நிற்கப் போகிறார் என்று யோபு ஒரு எண்ணத்தைக் கொண்டிருந்து, ஆகையால் அவன், “என்னை இங்கே அடக்கம் பண்ணுங்கள்” என்று கூறியிருந்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் யோசேப்புடன், அல்லது யோபுடன் இருக்க விரும்பி, அவர்கள் அங்கே சரியாக பாலஸ்தீனாவில் சுற்றிலும் அடக்கம் பண்ணினார்கள், ஏனென்றால் அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாக இருந்தது. உயிர்த்தெழுதலானது எகிப்திலோ, ஐரோப்பாவிலோ, வேறு எங்கும் இருக்கப் போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது பாலஸ்தீனாவுக்குள் தான் இருக்கப் போகிறது, எனவே அவர்கள் அங்கே அவர்களை அடக்கம் பண்ணினார்கள். 46அதோடு கூட இயேசுவும் வந்தார், அவர்கள்... அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒருவர். அவர்கள் என்ன செய்வார்கள் என்று சொன்னார்களோ, அதை அவர்கள் அவருக்குச் செய்தார்கள், மேலும், ஓ, அவர்கள் அவரைக் கொலை செய்தார்கள், அவர் மரித்தார். அவருடைய ஆத்துமா பாதாளத்திற்குள் இறங்கியது. அவர் காவலிலுள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை பிசாசிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, ஈஸ்டர் காலையில் திரும்பி வந்தார். அவர் பரதீசினூடாக வருகையில், அவர் அந்தக் கதவைக் தட்டினார், அல்லேலூயா, அவர், பிள்ளைகளே!“ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆபிரகாம், “யாரது?” என்றான். நான் உன்னுடைய வித்து, ஆபிரகாமுடைய வித்து.“ தானியேல், அது யார்?” என்றான். “மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்த கல் நான் தான்.” அதோ அவர்கள் இருக்கிறார்கள், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அங்கே பரதீசில் படுத்துக் கொண்டு, தரித்துக்கொள்ள வேண்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் கதவைத் திறந்தான். ஆபிரகாம், “நாம் வெளியே போய்க் கொண்டிருக்கிறோமா?” என்றான். இது பூமியில் ஏறக்குறைய பகல் வெளிச்சமுள்ள நேரமாக இருக்கிறது. நாம் போக ஆயத்தமாவோம்.“ ஆபிரகாம், “நாம் சற்று அங்கு போய் பார்க்கலாமா? நான் இந்தப் பட்டணத்தைப் பார்க்க விரும்புகிறேன்” என்றான். 'நல்லது, ஆமாம், நான் என்னுடைய சீஷர்களோடு கூட நாற்பது நாட்கள் தங்கியிருக்கப் போகிறேன்.“ ஈஸ்டர் காலையில், அவர் உயிர்த்தெழுந்தார்! “பூமியின் தூளில் நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்து, பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, நகரத்திலுள்ள அவர்களில் அநேகருக்குக் காணப்பட்டார்கள் என்று மத்தேயு 27 கூறுகிறது. சாராளும் ஆபிரகாமும் தெருவில் வந்து கொண்டிருந்து, “ஓ, தேனே, அதோ பார்! அவர்கள் இவைகளைக் கொஞ்சம் மாற்றி விட்டிருக்கிறார்கள். இது எவ்வாறு காணப்படுகிறது என்று இங்கே சுற்றிலும் பார்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அப்போது யாரோ ஒருவர், “அதோ அந்த ஜோடிகள் யார்? அவர்கள் அந்நியர்கள் போன்று தோன்றுகிறதே” என்று கூறுகிறார். உடனே இவர்கள், “நம்மை அடையாளம் கண்டு விட்டார்கள்” என்று கூறி, (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரலைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.) அவர் (இயேசு) சுவரினூடாகப் போனது போன்று, அவர்களுடைய பார்வையி லிருந்து மறைந்து விட்டார்கள், அவர் (இயேசு) சுவரினூடாகப் போனது உங்களுக்குத் தெரியும், அவர் உள்ளே வந்ததை அவர்கள் அறியவோ அல்லது பார்க்கவோ கூட இல்லை. பிறகு வெளியேயும் போய் விட்டார்! அவர்கள் மகிமையடைந்த சரீரங்களைக் கொண்டிருந்து, மீண்டும் பூமியின் மேல் காணப்பட்டார்கள், அல்லேலூயா, தேவனுடைய வல்லமை மற்றும் உயிர்த்தெழுதலினுடைய நிரூபணத்தின் முதற்பலன்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அங்கே இருந்தார்கள். அதிகாரங்களை கொள்ளையிட்டும், அதிகாரங்களைப் பறித்துக்கொண்டும், மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து, கீழே அடக்கி விட்டார்கள். அவர்கள் ஈஸ்டர் காலையில் மேலே எழுந்து வந்து, அவரோடு கூட இராஜ் யத்திற்குள் பிரவேசித்தார்கள். அவர்கள், என்னை பாலஸ்தீனாவில் அடக்கம் பண்ணுங்கள்“ என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. உயிர்த்தெழுதல் பாலஸ்தீனாவில் இருக்கப் போகிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். 47ஆகையால், சகோதரனே, இன்று உனக்கு விருப்பமான எதையும் நீ கொண்டிருக்கலாம், நீங்கள் விரும்பும் எல்லா பழைய குளிர்ந்து போன சம்பிரதாயமான மார்க்கத்தையும் நீங்கள் கொண்டிருக்கலாம், ஆனால், என்னை கிறிஸ்துவுக்குள் அடக்கம் பண்ணுங்கள், கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அவரோடு கூட உயிர்த்தெழுதலில் கொண்டு வருவார். உங்களுக்கு விருப்பமான எதையும் கூறுங்கள், இதை மதவெறித்தனம் என்றும் அழையுங்கள், நீங்கள் செய்ய விரும்பும் எதையும் செய்யுங்கள், ஆனால் என்னை அவருக்குள் தங்கியிருக்க விடுங்கள், அவருக்குள் இருப்பவர்கள் உயிர்த்தெழுதலில் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள், தேவன் அவர்களை மேலே கொண்டு வருவார். அதைச் செய்வதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். ஆமென்! 48உங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்குமானால், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? நல்லது, தேவனுக்கு மகிமை! அதனோடு செய்வதற்கு அதற்கு ஏதாகிலும் சம்பந்தம் உண்டா? அப்போது வீட்டிற்கு அருகில் வந்து விடுகிறோம்! ஆமென். ஓ, மகிமை! எப்படியும் என்னை பரிசுத்த உருளையன் என்று அழைக்கப் போகிறீர்கள், நீங்கள் (இப்போது கூட அவ்வாறு அழைக்கத் துவங்கலாம். சரி. எவ்வளவு அற்புதமாயுள்ளது! உங்களிலிருந்து ஒரு பரிசுத்த உருளையை உண்டாக்க அது போதுமானதாயுள்ளது. ஏன், அது சத்தியம் என்பதை அறிந்துகொண்டு, என்னால் எப்படி சந்தோஷப்படாமல் இருக்க முடியும்? ஏன், நிச்சயமாக, நான் சந்தோஷமாயிருக்கிறேன். அந்த நம்பிக்கையைப் பெற்றிருக்கிற எல்லாருமே உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 49நான் வழக்கமாக தண்ணீர் குடிப்பதற்கு ஒரு பழைய நீரூற்றிற்குப் போவதுண்டு. ஜூனியர், நான் வழக்கமாக அங்கே போவதுண்டு. நான் ரோந்து பணியிலிருந்த போது, இந்தப் பழைய நீரூற்றிற்குப் போகலாமே என்று நினைத்தேன். அது அங்கேயிருந்த மிகவும் சந்தோஷமான காரியமாக இருக்கிறதே என்று சொன்னேன், அது மில்டவுனுக்கு கீழே இருக்கிறது. நான் வழக்கமாக அதைப் பார்த்து, நல்லது, நல்லது, எது உன்னை மிகவும் சந்தோஷமாக இருக்கச் செய்கிறது?“ என்று நினைத்தேன். அது -அது எல்லா நேரமும் பொங்கி, பொங்கி, பொங்கி, பொங்கி வந்து கொண்டே யிருந்தது. நான் எப்பொழுதும் குடித்ததிலேயே அதுதான் மிகச்சிறந்த தண்ணீ ராக இருந்தது. நான், 'நல்லது, எது உன்னை மிகவும் சந்தோஷமாக இருக்கும்படி செய்கிறது, மிருகங்கள் உன்னிலிருந்து குடிக்கிற காரணத்தினாலா?” என்று நினைத்தேன். இல்லை , சகோதரன் பில், அதுவல்ல காரணம்.“ “நல்லது, எல்லா நேரமும் உன்னைப் பொங்கி (வழியும்படி செய்வது என்ன? யாராவது ஒருவர் இங்கு வந்து, தண்ணீர் எடுக்கிற காரணத்தினாலா?” “இல்லை , அதுவல்ல காரணம்.” நல்லது, ஒருக்கால் நான் இதிலிருந்து குடிக்கிற காரணத்தினாலா நீ பொங்கிக் கொண்டிருக்கிறாய்.“ “இல்லை .” நான், “நல்லது, நீ எதைக் குறித்துதான் பொங்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று கூறினேன். அதுவால் பேச முடிந்திருக்குமானால், அது, “சகோதரன் பில் அவர்களே, பொங்கிக் கொண்டிருப்பது நானல்ல, ஏதோவொன்று எனக்குப் பின்னால் இருந்து, என்னைத் தள்ளிக் கொண்டு, மேலே பொங்கி வரும்படி செய்து கொண் டிருக்கிறது” என்று கூறியிருக்கும். 50பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் வரும் போது, அங்கே ஏதோவொன்று இருக்கிறது, நித்திய ஜீவகாலமாய் பொங்கி வந்து கொண்டிருக்கிற வேகமாய் பீறிட்டுப் பாய்ந்து ஓடும் நீரூற்றுகள் அங்கே இருக்கிறது. உங்களால்.... எப்படி முடியும்? கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம் இயேசு, இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். அது அவனுக்குள் இருந்து, நித்திய ஜீவகாலமாய் பொங்கி வருகிற நீரூற்றாயிருக்கும்“ என்று கூறினார். அல்லேலூயா! (நாம் யாத்திராகமத்துக்குத் திரும்பிச் செல்வோம்.) ஓ, என்னே, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! நித்திய ஜீவன், 10,000 மில்லியன் வருடங்கள் கடந்த பிறகும்! பூமியில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக தண்ணீரால் மூடப்பட்டிருக்கிற இந்தப் பழைய சமுத்திரங்களும், தண்ணீரும், இந்தக் கூடாரத்தைப் போன்று இரண்டு அல்லது மூன்று பங்கு அளவில் பெரிதாக அவைகள் சுருட்டிக் கொண்டு வந்து, கப்பல்களுக்குள் உடைத்து நொறுக்கிக்கொண்டு, ஒருபக்கம் மறுபக்கத்தின் மேல் விழுந்து கொண் டிருக்கும் போது, அங்கே வெளியிலுள்ள அந்த மகத்தான dashers களின் வழியாக வேகமாக வரும்; சகோதரனே, இந்நாட்களில் ஏதோ ஒன்றில், அவைகள்... அவைகள் தாங்க ளாகவே வனாந்தரங்களுக்குள்ளே கதறி அழும் அளவுக்கு பாவமானது பூமியின் மேல் மிகவும் பெரிதாக குவிந்திருக்கிறது. அதற்கு மேலும் சமுத்திரம் இருக்காது, அதற்கு மேலும் சந்திரன்களோ, நட்சத்திரங்களோ இருக்காது. அல்லேலூயா! நானோ தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன்! மறுபடியும் பிறந்த ஒவ்வொரு மற்ற மனிதர்களும் ஸ்திரீகளும் அதோ அங்கிருக்கிற அவருடைய கம்பீரமான பிரசன்னத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், அவருடைய ஒரேபேறான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக ஆக்கப்பட்டிருப்போம். அவருடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்! கவிஞன் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லை, “தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐசுவரியமும் தூய்மையு மானது, எவ்வளவு ஆழம்காண இயலாதது, பெலமானது! பரிசுத்தவான்களும் தேவதூதர்களும் அதை என்றென்றைக்கும் இடைவிடாமல் பாடிக்கொண்டிருப்பர். நாம் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? என்னே! ”சகோதரன் பிரன்ஹாமே, அது உறுதி தானா?“ ஆமாம். 51இப்பொழுது, ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் இப்பொழுது யோசேப்பு. யோசேப்பு மரித்தான், அது என்னவொரு பரிபூரணமான திருஷ்டாந்தமாக இருந்தது, அவனுடைய எலும்புகள் ஒரு ஞாபகார்த்தமாக அங்கே விடப்பட்டிருந்தது. 52இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்... பில்லி அங்கே பின்னால் இருக்கிறான் என்று நினைக்கவில்லை, அவன் சுற்றிலும் இருக்கும் போது, நான் அவனிடம் இதைக் கூறுவதில்லை. நாங்கள் நினைவு நாள் காலையில் (Decoration morning), அவனுடைய தாயாருடைய கல்லறையின் மேல் ஒரு மலரை வைத்தோம். அப்போது அவன் அங்கே நின்று கொண்டு அழுது கொண்டிருந்தான். நான், பில்லி, அழாதே. அப்படியே உன் கண்களை மூடிவிட்டு, அதோ அங்கே யிருக்கிற கடலுக்கு மறுபக்கத்தில் நோக்கிப்பார். அம்மா அங்கே படுத்துக் கொண்டிருக்கிறாள், சிறிய சகோதரியும் அவளோடு படுத்துக் கொண்டிருக்கிறாள்; ஆனால் அவர்கள் அங்கேயில்லை. அதோ அங்கிருக்கிற கடலுக்கு மறுபக்கத்தில் ஒரு காலியான கல்லறை இருக்கிறது“ என்றேன். அல்லேலுயா! 53அங்கே தான் நான் பார்க்கிறேன், அந்த எபிரேயர்கள் நோக்கிப் பார்த்து, “ஏதோவொரு நாளில், நாம் வெளியே போவோம்” (என்றது) போல அப்படியே. ஏதோவொரு நாளில் நாம் வெளியே (போகப் போகிறோம்! நான் ஒருபோதும், சாம்பலிலிருந்து சாம்பலுக்கும், அல்லது புழுதி யிலிருந்து புழுதிக்கும், மண்ணிலிருந்து மண்ணுக்கும் என்று கூறுவதைக் கேட்பதில்லை, ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஏதோவொரு நாளில்!“ என்பதையே. 54நான் அன்றொரு நாளில், இங்கே இந்தப் பட்டணத்தினுடைய முன்னாள் பொது அதிகாரி (ex-sheriff) ஒருவரின் அடக்க ஆராதனையில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்த போது. அந்தப் பையன் அப்பொழுதுதான் கிறிஸ்துவிடம் வந்திருந்தான், மரிப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பு தான் அவன் கிறிஸ்துவிடம் வந்திருந்தான். அவனு டைய வயதான தலைநரைத்த தகப்பனார் சவப்பெட்டியில் வைக்கப்படுவதை நான் கண்டேன், நடுங்கிக் கொண்டிருக்கும் உதடுகளோடு, கண்ணீர் வழிந்தோட அந்தப் பையன் பிரியா விடை கொடுக்க முத்தமிட்டு, ஏறக்குறைய அந்த சவப்பெட் டிக்குள்ளே விழுந்தே விட்டான். நான் அதைக் கேட்டு, மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அவன் அந்த பூக்களை இட்டான். திரும்பிப் பார்த்த நான், “சாம்பலிலிருந்து சாம் பலுக்கும், புழுதியிலிருந்து புழுதிக்கும், மண்ணிலிருந்து மண்ணுக்கும்” என்றேன். அப்போது நான், “ஏதோவொரு மகிமையான நாளில்! ஏதோவொரு பொன்னிறமான சூரிய உதயத்தில், இயேசு வருவார்!” என்று எண்ணிக் கொண்டேன். அது சரியே. சரி. 55நாம் எப்போது பாடத்திற்கு வரப்போகிறோம்? எகிப்திலே, காலங்கள் கடந்து விட்டிருந்தன. (எனக்காக ஜெபி யுங்கள்.) பிறகு, அங்கே, முடிவில் யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் அங்கே எழும்பினான். அவர்கள் நானூறு வருடங்கள் அங்கே இருப்பார்கள் என்று தேவன் வாக்குப் பண்ணியிருந்தார், அவர்கள் அங்கிருந்து வெளியே சென்ற போது, நானூற்று இருபது வருஷங்கள் அங்கே இருந் திருந்தனர். 56இப்பொழுது, முதலாவது அதிகாரம், முதலாவது அதிகாரம் முதல் 5வது அதிகாரம் முடிய, 5வது வசனம் முடிய, எகிப்தில் இஸ்ரவேலர் இருப்பதாகும். ஏழாவது வசனத்திலிருந்து, 22ம் வசனம் முடிய அவர்களுடைய அடிமைத்தனத்தோடு சம்பந்தப்பட்டது. அதை உங்களில் அநேகர் அடிக்கடி வாசித்திருக்கிறீர்கள். நான் இப்பொழுது ஒரு சிறிய முக்கிய விஷயத்துக்கு வரப்போகிறேன். வெறுமனே கொஞ்ச நேரம் தான் உள்ளது. அதன்பிறகு நாம் இரண்டாவது அதிகாரத்தில் துவங்குவோம், விடுதலைக்கான ஆயத்தம், மோசேயின் பிறப்பு. ஜனங்கள் ஆயத்தமாகத் துவங்குகிறார்கள். ஆளோட்டிகள் அடித்துக் கொண்டிருந்தார்கள், பிள்ளைகள் கொல்லப்பட்டனர். தேவனுடைய தீர்க்கதரிசன சக்கரங்களின் பற்களுடைய வேளையானது அந்த நேரம் வரை அரைத்துக் கொண்டு தான் இருந்தது. 57கவனியுங்கள், நீங்கள் இதைப் புரிந்து கொள்ளும்படி நான் விரும்புகிறேன், அவைகள் மறுபடியுமாக இதுவரையில் அரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது என்று நம்புகிறேன். நாம் இங்கே இருக்கிறோம் என்று நம்புகிறேன். காரியங்கள், அவைகள் இப்பொழுது இருக்கிற விதமாக போகிறதற்கு அதுதான் காரணம் என்று நினைக்கிறேன். பழைய தீர்க்கதரிசன கடிகாரம் மெதுவாக டிக் டிக் என்று சரியாக ஏறக்குறைய ஏதோவொன்று துவங்கும் இந்த நேரம் (zero hour) வரை அடித்துக் கொண்டிருக்கிறது (ticked). கொஞ்ச காலத்திற்கு முன்பு, அதன் பேரில் பிரசங்கம் பண்ணினேன். ஒரு ஜெர்மானிய ஓவியர் அதைத் தீட்டியிருந்தார், அதை நான் என்னுடைய வீட்டில் தொங்க விட்டிருக்கிறேன்; அதில் ஒரு மனிதன் ஜெபித்துக் கொண்டிருக்கிறான், வேதாகமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது, ஒரு சிறிய கொழுப்பினாலான மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது, மேலும் கடிகாரத்தில் பன்னிரண்டு மணியாவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கின்றன, அது ஒரு ஆயில் ஓவியத்தில் (oil painting) உள்ளது. ஆயத்தம், ஆயத்தமாகிக் கொண்டிருத்தல், தேவன் எதையோ செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். 58அவர் ஏதோவொன்றைச் செய்ய ஆயத்தமான போது, எகிப்தில் ஒரு வினோதமான விதத்தில் ஒரு சிறு பையன் பிறக்கும்படி செய்தார். அவன் மற்ற எந்த பையனைக் காட்டிலும் மேலானவன் அல்ல. அது வெறுமனே லேவி கோத்திரத்திலுள்ள ஒரு மனிதனாக இருந்தது, அவன் போய் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனைவியை தனக்கு பெற்றுக் கொண்டான், அவர்களுக்கு ஒரு சிறிய குழந்தை இருந்தது. மேலும் அவர்கள் எல்லா சிறிய ஆண் குழந்தைகளையும் கொலை செய்து கொண்டிருந்தார்கள், ஆனால் இந்தக் குழந்தை பிறந்த போது, அங்கே அந்தக் குழந்தை யைக் குறித்து வினோதமான ஏதோவொன்று இருந்தது, ஏதோ வொன்று சம்பவித்தது. முன்குறித்தல், முன்குறிக்கப்படுதல். மோசேக்கு அதனோடு செய்வதற்கு எந்த சம்பந்தமும் இல்லாதிருந்தது. ஆனால் அவன் மோசேயாக இருந்தான், எனவே அவர்கள் இராஜாவினுடைய கட்டளைகளுக்குப் பயப்பட வில்லை. அவர்கள் அவனை ஒரு சிறு பெட்டியில் வைத்து விட்டனர், அவன் சரியாக பார்வோனுடைய வீட்டு வாசலிலேயே வளர்க்கப்பட்டான் (அது சரிதானா?), பார்வோனுடைய குமாரனாகக் கூட ஆகும்படி வளர்க்கப்பட்டான். சரி, இப்பொழுது. 59மோசே, 11ம் வசனம் தொடங்கி, 25வது வசனம் வரையில், மோசே தன்னை இஸ்ரவேல் புத்திரர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வது (identifying) இருக்கிறது. அது அங்கே எவ்வாறு சம்பவித்தது என்பது அநேகருக்குத் தெரியும். அவன் தன்னைத்தான் அடையாளப்படுத்திக் கொண்டான். அதன்பிறகு அவன் அவ்வாறு செய்தபோது, அந்த அடிமைத்தனத்தின் கீழிருந்து அவர்களை வெளியே கொண்டுவரும்படியாக அனுப்பப்பட்ட மனிதன் அவன் தான் என்று அந்தச் சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அவன் நினைத்தான், ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள். அது சரிதானா? மேலும், ஓ, ஜனங்களே, இன்றைக்குரிய எவ்வளவு அழகான ஒரு முன்னடையாளமாக அது இருக்கிறது! ஜனங்களை விடுவிக்க வந்த அதே காரியம், அவர்கள் அதைக் குறித்து பயப்படுகிறார்கள். அவர்கள் இரட்சகரைக் குறித்துப் பயப்படுகிறார்கள். 60கவனியுங்கள், அவர்கள் சாலமோனுடைய தேவால யத்தைக் கட்டின போது, அவர்கள்... இப்பொழுது இங்கேயிருக்கிற கொத்தனார்களாகிய (masons) உங்களில் எவரும் இதை மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் கேதுரு மரங்களை (cedars) லீபனோனிலிருந்து கொண்டு வந்தார்கள், அவர்கள் அவைகளை யோப்பா மட்டும் தெப்பங் களாய்க் கட்டி மிதக்கும்படி செய்து (floated), அவைகளை காளை வண்டியின் மூலம் இழுத்துக் கொண்டு வந்தார்கள், மேலும் மற்ற காரியங்களையும் செய்தார்கள், அது உங்க ளுக்குத் தெரியும். அதன்பிறகு அவர்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகள் எங்கிலுமிருந்து தங்களுடைய கற்கள் எல்லாவற்றையும் வெட்டியெடுத்தார்கள். ஆனால் அவைகள் ஒன்றாக வந்த போது, அவைகள் அவ்வளவு பரிபூரணமான கட்டுமானமாக இருந்தன. அந்த தேவாலயத்தைக் கட்டின நாற்பது வருடங்களிலும், அங்கே இரம்பம் அறுக்கின்ற சத்தமோ, அல்லது ஒரு சம்மட்டி அடிக்கிற சத்தமோ கேட்கப்படவில்லை. ஒவ்வொரு கல்லும் அங்கு சென்றது, ஒன்று இந்த விதமாக வெட்டப்பட்டிருந்தது, ஒன்று அந்த விதமாக வெட்டப்பட்டிருந்தது, ஒன்று பின்னோக்கி இந்த விதமாக வெட்டப்பட்டிருந்தது, ஆனால் அவைகளில் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று பொருந்தினது. அவர்கள் அந்தக் காரியத்தை வைக்கத் தொடங்கி, அந்தக் கட்டிடத்தை கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள், கட்டிடம் அருமையாக கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேடிக்கையாகத் தோற்றமளித்த ஒரு கல்லைக் கண்டுபிடித்தார்கள். அவர்களுக்கு அந்தக் காரியம் பிடிக்காமல், “அது இங்கே பொருத்தமாக இருக்காது” என்று கூறி, அதை அவர்கள் உதைத்து, வெளியேயிருந்த அந்த களைச்செடி குவியலின் மேல் எறிந்து விட்டார்கள். அதன்பிறகு அவர்கள் கண்டு பிடிக்க நேர்ந்தது என்னவென்றால், அவர்கள் தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து கட்டிக் கொண்டிருக்கையில், தாங்கள் ஒதுக்கிப்போட்ட அதே கல் தான் பிரதான மூலைக்கல்லாயிருந்ததைக் (chief cornerstone) கண்டுபிடிக்க நேரிட்டது. இயேசு அவ்வாறு கூறியுள்ளார். 61இன்றைக்கு, சுற்றி எங்கிலுமுள்ள, மெதோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, லூத்தரன்களே, பெந்தெகோஸ்தேகாரர்களே, நண்பர்களே, நீங்கள் கவனமாக இருக்கவில்லை என்றால்; உண்மையான மூலைக்கல்லை நீங்கள் புறக்கணித்து விடுவீர்கள், இந்த ஆவிக்குரிய வீடாகிய கட்டிடத்திலுள்ள மூலைக்கல் பரிசுத்த ஆவியானவரே. நீங்கள் அதைக் குறித்து பயப்படுகிறீர்கள். நீங்கள் மதவெறித்தனத்தைக் குறித்து பயப்படுகிறீர்கள். நாம் நிறைய பழைய சோளக்கொல்லை பொம்மைகளையும் பரிகாசத்தையும் பெற்றிருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஏன், அங்கே அது இல்லை என்றால், அங்கே ஒரு உண்மையான ஒன்று இருக்காதே. ஆனால் அங்கே ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியானவரின் அசலான காரியம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது உண்மை . சரி. இப்பொழுதோ அவர்கள் அதைப் புறக்கணித்து, “ஓ, நம்மால் அதைச் செய்ய முடியாது. ஓ, நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நம்மால் அதைக் கொண்டிருக்க முடியாது” என்று கூறுகிறார்கள். 62நான் அன்றொரு நாளில் இங்கே இதைக் கூறினேன், ஒரு பெரிய கல்லூரியின் முதல்வர் (dean) என்னுடைய வீட்டில் உட்கார்ந்திருந்தார், அவர் பில்லி கிரஹாமுடைய கல்லூரியிலிருந்து வந்திருந்தார், அவர் தான் டாக்டர். சாந்தன், அவர்களில் ஒரு கூட்டம் பேர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள், “சகோதரன் பிரன்ஹாமே, காரியம் என்னவென்று நாங்கள் உம்மிடம் கூறுகிறோம். உலகத்தை மனமாற்றமடையச் செய்ய அது போதுமானது. என்ன விஷயம் என்று நான் உங்களிடம் கூறுகிறேன், உமது கூட்டத்தில் மிக அதிகமான பெந்தெகோஸ்தேகாரர்களையும் பரிசுத்த உருளையர்களையும் நீர் பெற்றிருக்கிறீர். குற்றச்சாட்டு அதுதான்” என்றார்கள். நான், “நீங்கள் அதற்கு பண உதவி செய்து தாங்குவீர்களா (sponsor)?” என்று கேட்டேன். “நல்லது, நிச்சயமாக, எங்களிடம்... உண்டு .” ஆமாம், நானும் அவ்விதமாய் தான் நினைத்தேன். இல்லை, நீங்கள் அதற்கு பண உதவி செய்து தாங்க மாட்டீர்கள். நிச்சயமாக, நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். அது சரியே.“ 63அந்தப் பெரிய சபைகளால் தொடர்ந்து சென்று, தங்கள் வேதசாஸ்திரத்தைக் கொண்டிருந்து, தாங்கள் இதைக் குறித்தும், அதைக் குறித்தும் பெருமையுடன் பேசி, விலகி நின்று, அவர்களுக்குப் பின்னால் அவர்களுடைய இறை யியல் டாக்டர் பட்டங்களையும் (D.D.'s), மற்றும் அதைப் போன்ற காரியங்களையும் கொண்டவர்களாய் பார்த்தும், ஒரு முயல் பனிக்காலணிகளை அணிந்து கொள்வதைக் குறித்து அறிந்திருப்பதைக் காட்டிலும், அவர்களில் சிலருக்கு தேவனைக் குறித்து அதிகம் தெரியாது. அது சரியே. ஓ, ஓ, எல்லா கிரேக்க வார்த்தைகளும் நிச்சயமாகவே அவர்களுக்குத் தெரியும், அவர்களுடைய கல்வி அவர்களுக்குத் தெரியும். தேவன் வேதசாஸ்திரத்தின் மூலமாகவோ அல்லது கல்வியின் மூலமாகவோ அறியப்படுபவரல்ல. தேவன் விசுவாசத்தின் மூலமாகவே அறியப்படுகிறார்! அறிவு ஒரு மனிதனை தேவனை விட்டுத் தூரமாகக் கொண்டு செல்கிறது; விசுவாசமோ அவனை தேவனிடம் கொண்டு வருகிறது. ஏதேன் தோட்டத்தில் அதுதான் அவனை தேவனை விட்டு வேறுபிரித்தது, அவன் அறிவின் விருட்சத்திடம் சென்று விட்டான். 64ஜனங்களுக்கு ஜீவனைக் கொண்டு வந்த பரிசுத்த ஆவியானவரின் அதே ஞானஸ்நானமே, ஆகையால் தான் பெந்தெகோஸ்தேகாரர்களும், நீங்கள் அவர்களை அழைக்கிறபடி பரிசுத்த உருளையர்களும், தெய்வீக சுகமளித்தலின் நிமித்தமாக என்னை ஏற்றுக் கொள்கிறார்கள். ஓ, நிச்சயமாக, இராஜாக்களும் ஆட்சியாளர்களும் (potentates), அவர்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டு, அவர்கள், இங்கே வாரும்“ என்று கூறுகிறார்கள், கர்த்தரோ இரக்கமுள்ளவராயிருந்து, அவ்விதமாய் இருக்கிற அவர்களைச் சுகமாக்குகிறார். அது உண்மை . ஆனால் அதில் மீதமுள்ள மற்றவர்கள் எல்லாரும், நீங்கள் நித்திய ஜீவனைக் குறித்து பேசும்போது, அவர்கள், அது ஆங்கிலிக்கன் சபைக்குத் தான் சொந்தமானது“ என்றும், அவர்கள், ”இது, அது, மற்றதற்கு சொந்தமானது“ என்றும், சபைக்கு சொந்தமானது என்றும் (சொல்லி விடுகி றார்கள்.) அதற்கு இதனோடு செய்வதற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால், நீங்கள் சபையைச் சேர்ந்திருப்பது அதை [சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரலைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.) தேவ னோடு அர்த்தப்படுத்துவதில்லை! அங்கே ஒரேயொரு சபை தான் உண்டு, அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக, இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பிறந்தவர்களாக இருக்கிறது. அல்லேலூயா. என்னுடைய சகோதரனே, நான் இதை உன் னிடம் கூறட்டும், கிறிஸ்துவுக்குள் வருவதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. அது கரங்களைக் குலுக்குவதன் மூலமல்ல, தண்ணீர் ஞானஸ்நானத்தின் மூலமாகவும் அல்ல, தெளிப்பதன் மூலமாகவோ மாமிசம் புசிப்பதை நிறுத்துவதன் மூலமாகவோ, ஓய்வு நாட்களை அனுசரிப்பதன் மூலமாகவும் அல்ல. புகைப்பிடிப்பதையும், புகையிலை) மெல்லுவதையும், குடிப்ப தையும், ஆணையிடுவதையும், இந்த எல்லா காரியங்களையும் விட்டு விடுவதன் மூலமாகவோ அல்ல, கிறிஸ்துவுக்குள் வரும் வழி அதுவல்ல. 65புகைப்பிடித்தல், விஸ்கி குடித்தல், சட்டத்திற்குப் புறம்பாக மற்றவர்களோடு, பெண்களோடு ஓடுதல், நீங்கள் செய்யும் இந்தக் காரியங்கள் எல்லாம், அது பாவமல்ல. அங்கே எதுவுமில்லை ... அது பாவமல்ல. சாபமிடுதலோ, ஆணையிடுதலோ, குடித்தாலோ, அது பாவமல்ல, அது பாவத்தினுடைய குணங்களாகும் (attributes). நீங்கள் ஒரு பாவியாக இருக்கிறீர்கள், அதுதான் உங்களை அதைச் செய்ய வைக்கிறது; ஆனால் அது பாவமல்ல, அது அதனுடைய குணங்களாகும் (attributes). இப்பொழுது இதைப்போன்று, இது உங்களைப் புண்படுத்தப்போகிறது. ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு நான் பொறுப்பு, எந்த நேரமும் நான் அதைப் பற்றிப் பேச ஆயத்தமாயிருக்கிறேன். இங்கே தான் பெந்தெகோஸ்தே ஜனங்களாகிய நீங்கள் உங்கள் தவற்றைச் செய்திருக்கிறீர்கள், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற உங்களில் அநேகர், பரிசுத்த ஆவியினுடைய ஆரம்ப அத்தாட்சியானது, அந்நிய பாஷைகளில் பேசுவது தான் பரிசுத்த ஆவியாக இருக்கிறது என்ற போதனையை உடையவர்களாயிருக்கிறீர்கள். ஏன், அந்நிய பாஷைகளில் பேசுவது எல்லாம் சரிதான், ஆனால் அது ஒரு தன்மையாக (attribute) இருக்கிறது. அது பரிசுத்த ஆவியல்ல; அதைப் பரிசுத்த ஆவி செய்கிறார். பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய அன்பாக இருக்கிறது. என்னால் அதை வேதாகமத்தைக் கொண்டு நிரூபிக்க முடியும். நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை .“ உங்களுக்கு ஒரு ஆப்பிள் மரம் தேவையாயிருந்து, நீங்கள் வெறுமனே ஒரு ஆப்பிள் பழத்தை வைத்திருந்தீர்களானால், நீங்கள் ஒரு ஆப்பிள் மரத்தை பெற்றுக் கொள்வதிலிருந்து அதிக கால இடைவெளியில் (long ways) இருக்கிறீர்கள். பாருங்கள், அது ஒரு தன்மையாக (attribute) இருக்கிறது. 66பாவம்! நீங்கள் சபிப்பதற்கும், புகைப்பிடிப்பதற்கும், குடிப்பதற்கும், கோபமடைவதற்கும், கட்டுப்படுத்த முடியாத கோபத்திற்கும், மற்றும் அதைப்போன்ற காரியங்களுக்கும் காரணம் என்னவென்றால், நீங்கள் ஒரு பாவியாக இருப்பது தான் அதற்குக் காரணம். அது பாவமல்ல; நீங்கள் ஒரு பாவியாக இருக்கிற காரணத்தினால் அது அவ்வாறு இருக்கிறது. இயேசு சொன்னார், வேதவாக்கியம் இதைக் கூறுகிறது, விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.“ நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் அக்காரியங்களைச் செய்ய மாட்டீர்கள், ஏனென்றால் கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் அவைகளைச் செய்வீர்களானால், அது நீங்கள் ஒரு பாவியாக இருப்பதும், நீங்கள் ஒரு விசுவாசியாக இல்லாமல் இருப்பதும் தான் காரணம். நீங்கள் அவ்வாறு இருப்பதாக உரிமை கோரின போதிலும், இன்னும் நீங்கள் அவ்வாறு இல்லை. மரமானது அதன் கனியினால் அறியப்படுகிறது. இப்பொழுது, அது, நான் வாசிக்கையில், அதை அப்படியே ஒரு நிமிடம் மனதில் பதித்துக்கொள்ளுங்கள். அது சரியே. அதைத்தான் இயேசு, ”மரமானது அது கொடுக்கும் கனியினால் அறியப்படும். ஒரு கெட்ட மரம் நல்ல கனியைக் கொடுக்க மாட்டாது“ என்று சொல்லியிருக்கிறார். சரி. 67தொடர்ந்து போவோம், இதோ அவர்கள் வருகிறார்கள், விடுதலையின் நேரம். மோசே பிறந்து, பார்வோனுக்கு மிக அருகில் வளர்க்கப்பட்டு, வெளியே வந்து, அவன் தான் அதைச் செய்வதற்கான ஆள் என்று புத்திரர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்பினான். ஆனால் அவர்கள் அதை உணர்ந்திருந்தார்களா? இல்லை, ஐயா. அவர்கள், எங்கள் மேல் உன்னை அதிகாரியாக ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டது போல, எங்களையும் கொன்று போடுவாயோ?“ என்றார்கள். (உடனே) மோசே தப்பி ஓடினான். சரி. மோசே, தன்னுடைய சகோதரர்களால் புறக்க ணிக்கப்பட்டான். 68இரண்டாவது அதிகாரம், 21வது வசனத்தில் தொடங்குவோம், நாம் அப்படியே ஒருநிமிடம் இதில் நிறுத்தப் போகிறோம். நான் ஒரு பின்னணியை உங்களுக்குக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கு இன்னும் ஒருசில நிமிடங்கள் தான் மீதியாக உள்ளன, நாம் ஒருக்கால் நாளை இரவில் முடிக்க வேண்டியிருக்கும். கவனியுங்கள், அவன் தன்னுடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு, வெளியே மீதியான் தேசத்திற்குப் போய், ஒரு புறஜாதிப் பெண்ணை விவாகம் பண்ணினான். மோசே, கிறிஸ்துவுக்கு ஒரு பரிபூரண முன்னடையாளமாக இருக்கிறான். அது சரிதானா? அந்த கோத்திரப் பிதாக்கள் எல்லாருமே இயேசு கிறிஸ்துவுக்கு முன்ஜீவித்தவர்களாக இருந்தார்கள். மோசே உபத்திரவத்தின் கீழாகப் பிறந்தான். மோசேயினுடைய காலத்தில் எல்லா குழந்தை களையும் அவர்கள் கொலை செய்து கொண்டிருந்தது போன்று. இயேசு, அவர் வந்த போது, அவரைப் பிடிக்கும் படியாக, அவர்கள் எல்லா குழந்தைகளையும் கொலை செய்து கொண்டிருந்தார்கள். அது சரிதானா? பிசாசு மோசேயைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான், பிசாசு இயேசுவையும் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் முயன்று கொண்டிருந்தான்! 69இயேசு மேலே வருவதை என்னால் காண முடிகிறது, அந்தக் காலையில், அவர் அங்கே கீழே, நரகத்திலிருந்த கதவைத் தட்டுகிறார். அல்லேலூயா! (இன்றிரவு அதை இன்னுமாக போதிக்கும்படி அது எனக்குள் இருக்கிறா என்பதை நான் அறியேன்.) இயேசு கல்வாரியில் மரித்த போது, அவரை என்னால் காண முடிகிறது, அப்போது அவர் ஏறி, அங்கே கீழே சென்று, அங்கே உள்ளே பின்புறத்தில் அழுதுகொண்டும், புலம்பிக் கொண்டும், தொடர்ந்து இடை விடாமல் அவ்விதம் இருந்து கொண்டிருந்த அந்த ஜனங்கள் எல்லாரையும் கண்டு, “நீங்கள் தீர்க்கதரிசிகளுக்கு செவி கொடுத்திருக்க வேண்டும்” என்றார். அவர் காவலிலிருந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். “உங்களுக்கு ஏனோக்கும், தீர்க்கதரிசிகளும் இருந்தார்களே, உங்களுக்கு நியாயப்பிரமா ணங்களும் இருந்ததே, நீங்கள் ஏன் அதற்கு செவிகொடுக்க வில்லை?” அவர்கள் அதற்கு செவிகொடுக்கவில்லை. பின்பு அவர் அந்தக் கதவண்டை நெருங்கிப் போனார். அவர் கீழே நரகத்திற்குச் சென்று, கதவைத் தட்டினார். சாத்தான், அங்கே யார்?“ என்றான். அவர், வந்து, கதவைத் திற“ என்றார். ஓ, என்னே ! நான் நிச்சயமாகவே நாடகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அவன் கதவண்டை நடந்து வந்து, இழுத்து கதவைத் திறந்து, 'யார் நீ?“ என்று கேட்டான். ஏன், அவர், “நான் தான் இயேசு கிறிஸ்து” என்றார். “ஓ, அப்படியாக கடைசியில் இங்கு வந்து விட்டாய், அப்படித்தானே? °! பையனே, நான் நீண்ட காலமாக நான் உனக்குப் பின்னால் இருந்திருக்கிறேன்.” “நீ அப்படி இருந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.” “இப்பொழுது கவனி! நான் ஆபேலைக் கொன்ற போதே உன்னைப் பிடித்து விட்டேன் என்று நினைத்தேன். நான் மோசேயைக் கொன்ற போதே உன்னைப் பிடித்து விட்டதாக நினைத்தேன். நான் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்த போது, உன்னைப் பிடித்து விட்டேன் என்று நினைத்தேன். நான் யோவான் ஸ்நானனைப் பிடித்த போது, நிச்சயமாகவே உன்னைப் பிடித்து விட்டேன் என்று எண்ணினேன். ஆனால் இப்பொழுது நான் உன்னைப் பிடித்து விட்டேன், நீ இங்கே என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறாய்!” | அப்போது இயேசு கிறிஸ்து, “நான் கன்னிகையிடம் பிறந்த தேவ குமாரன். நான் என்னுடைய பிதாவின் தந்த மாளிகைகளிலிருந்து (ivory palaces) வந்தேன், நான் பூமிக்கு வந்தேன். பூமியின் மேல், இந்தக் காலையில் நான் கொடுத்த என்னுடைய இரத்தத்தைக்கொண்டு அது நனைக்கப்பட்டு, மரணத்திற்கும், பாவத்திற்கும், மற்றும் நரகத்திற்குமான விலைக்கிரயத்தை நான் செலுத்தியிருக்கிறேன். அந்தத் திறவு கோல்களை என்னிடம் கொடு!” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அல்லேலூயா! “நான் இந்த நேரம் முதற் கொண்டு ஜெயத்தைப் பெற்றுக்கொள்கிறேன். நீ ஜனங்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கிறாய், நீ அவர்களை பயத்திலும் மற்ற எல்லாவற்றிலும் வைத்திருக்கிறாய், ஆனால் நான் இது முதற்கொண்டு வெற்றி கொள்வேன்!” அல்லேலூயா! அவர் அவைகளைப் பிடுங்கி, தம்முடைய பக்கவாட்டில் அவைகளைத் தொங்க விட்டுக்கொண்டு, அவனை பின் னோக்கி உதைத்து நரகத்தில் தள்ளிவிட்டு, அப்பால் நடந்து போய் விட்டார். ஆமென். ஆமென்! 70வல்லமையான ஜெயவீரர், அவர் திரையை இரண்டாக கிழித்தது முதற்கொண்டு, 10, அவரை முழு காட்சியில் பார்க்க முடிந்தது)! வல்லமையான ஜெயவீரர் உயிர்த்தெழுந்து, “நான் மரித்தும் மீண்டும் உயிரோடிருக்கிறவராயிருக்கிறேன், நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கி றேன்” என்றார். அல்லேலூயா! என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. நான் உயிர்த்தெழுதலுக்குரிய திறவுகோல்களை உடை யவராயிருக்கிறேன், நான் அவனை கடைசி நாளில் எழுப்பு வேன்.“ அது என்னைத் திருப்திபடுத்துகிறது. ஆமென்! ”நான் இருக்கிறவர்.“ ஆமென். ஓ, என்னே ! 71மோசே, தன்னுடைய சொந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டான்; இயேசுவும் தம்முடைய சொந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டார். யோசேப்பு தன்னுடைய சொந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டான்; இயேசு அங்கே உள்ளே ஜீவித்துக் கொண்டிருந்தார் என்பதைப் பாருங்கள், அந்த தேவனுடைய ஆவி வெளியே பரிபூரணத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த மனிதருக்குள் அது பரிபூரணமாக இருந்தது இதோ இருக்கிறது. அது சரியே. அவர் மோசேக்குள் இருந்தார், நிச்சயமாகவே அவர் மோசேக்குள் இருந்தார்; அவன் தன்னுடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு, தனது சொந்த தேசத்திலே ஒரு அந்நியனாயிருந்து, ஒரு புறஜாதி மனைவியைப் பெற்றுக்கொண்டான். அல்லேலூயா. மறுபடியும் இரண்டு குமாரர்கள். ஆமென். நான் இந்தப் பாடங்களின் முடிவில் சரியாக அதற்கு வருவேன், சரியாக ஏறக்குறைய சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமையில் வருவேன். அந்த இரண்டு குமாரர்கள், எப்பிராயீமும் மனாசேயும். மறுபடியுமாக, இரண்டு குமாரர்கள். அது சரியா? 72இயேசு கிறிஸ்து தம்முடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியை அனுப்பி, சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு, வந்து, இப்பொழுது ஒரு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக்கொள்வது போல, அவன் தன்னுடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டான். யோசேப்பைப் போன்று அது கொடுக்கப்படுகிறது; அவன் தன்னுடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக்கொண்டான். ஓ, என்னே! இப்பொழுது, இரண்டாவது அதிகாரம். 73மோசேயின் அழைப்பு, எரிகிற முட்செடி. ஓ, அதற் குள் போக நமக்கு நேரம் இருக்க விரும்புகிறேன். நமக்கோ நேரமில்லை. இப்பொழுது வெறும் ஒரு சில வினாடிகள் தான் இருக்கின்றன, அப்படியானால் நாம் - அப்படியானால் நாம் முயற்சிப்போம். நீங்கள் களைப்படையும்போது, உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள், அப்போது நான் -நான் நிறுத்தி விடுவேன், நேர்மையோடு அவ்வாறு செய்வேன். 74கவனியுங்கள்! ஓ, சகோதரனே, இது மக்காச்சோள ரொட்டியைப் போன்றும் பீன்ஸைப் போன்றும் இருக்கிறது, அது உங்களுடைய விலா எலும்புகளுக்கு ஊடுருவிச் செல்கிறது. அது ஏதோவொரு விதத்தில் உங்களைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும், நாளைக்கு நீங்கள் கர்த்தருக்காக ஒரு நாளின் வேலையை நல்லவிதமாகச் செய்ய உங்களால் முடியும். நீங்கள் வெளியே சென்று, பிசாசை சந்தித்து, “நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அறிவேன். என்னுடைய முதுகில் ஒரு குளிர்ச்சியாக உணர்ச்சி பாய்ந்து ஓடின காரணத்தினால் அல்ல; அது கர்த்தர் உரைக்கிறதாவது என்ற காரணத்தினால் தான்! சாத்தானே, விலகிப்போ, நான் இப்பொழுது வெற்றி கொள்கிறேன்” என்று கூறலாம். 75இப்பொழுது நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறோம். ம்ம்! எப்போது? இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம்! நாளை இரவிலா? இல்லை, சரியாக இப்பொழுதே! இப்பொழுதே நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறோம்! இப்பொழுதே நாம் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்திருக்கிறோம். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். எப்பொழுது? இப்பொழுதே! இப்பொழுதே நாம் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறோம். “சகோதரன் பிரன்ஹாமே, நீர் மரிக்கும் போதா நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வீர்?” நான் இப்பொழுதே அதைக் கொண்டிருக் கிறேன்! இப்பொழுதே அது எனக்கு சொந்தம். எப்படி? இயேசு கிறிஸ்து அவ்வாறு சொல்லியிருக்கிறார், அது கர்த்தர் உரைக்கிறதாவது. எனவே, மரணமே, தூரப்போ. சாத்தானே, அப்பாலே போ, இனிமேலும் நீ என்னைக் கட்டிவைத்திருக்க முடியாது). 76பழங்கால பவுல்! அவர்கள் அங்கே வெளியே வெட்டுவதற்கான ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருந்து, பையனே, அது என்னவென்று உனக்குத் தெரியுமா? உன்னுடைய தலையை வெட்டப் போகிறோம்“ என்றார்கள். “அப்படியா? நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.” | “ஏய்! நீ மரிப்பதற்கு முன்பு, நீ என்ன சொல்லப் போகிறாய்?” மரணம், ஆ, சிறிய கொக்கி மூக்கு யூதனே! நீ வாரினால் அடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும், நீயே உன்னை ஏமாற்றி விட்டாய்... மற்ற காரியங்களும், அவர்கள் இதையும், அதையும், அல்லது மற்றதையும் செய்திருக்கிறார்கள், ஆனால் இப்பொழுதோ நான் உன்னைப் பிடித்து விட்டேன்“ என்றது. அவன் நோக்கிப் பார்த்தான். மரணமானது, ”நான் உனக்கு நடுக்கத்தையும் ஆட்டத்தையும் (shake) உண்டாக்குவேன்“ என்றது. அவனோ, மரணமே, உன் கூர் எங்கே?“ என்றான். 136. அங்கே வெளியே இருந்த கல்லறை, அந்த ஈர மண் (அவனை அங்கே அதற்குள், அந்த மண் குவியலுக்குள் அவனை வைக்கும்படியாக, அந்த ரோம போர் வீரன் கொஞ்சம் ஈர மண்ணை வெளியே எடுத்து எறிந்த போது), நான் உன்னைப் பிடித்து விடுவேன்” என்றது. அப்போது அவன், “ஓ மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, (இங்கே grave என்ற வார்த்தை உபயோகிக்கப் பட்டுள்ளது, அதற்கு கல்லறை என்று அர்த்தம் - மொழி பெயர்ப்பாளர்), உன் ஜெயம் எங்கே?” ஆனால் தேவனுக்கு நன்றி!“ என்றான். அந்தக் கல்லறையானது, “நான் உன்னைப் பிடித்து விடுவேன். நான் உன்னை மண்ணோடு மண்ணாக்கி விடுவேன் (mold). நான் உன்னை அழித்து விடுவேன் (canker). புழுக்கள் உன்னைத் தின்று போடும். உன்னுடைய எலும்புகள் மறுபடியும் மண்ணுக்குத் திரும்பி விடும்” என்றது. ஆனால் பவுலோ, “அதோ அங்கே வெளியேயிருக்கிற அந்தக் காலியான கல்லறையைப் பார், நான் அவருக்குள் இருக்கிறேன்! அல்லேலூயா! நான் அந்தக் காலையில் மீண் டும் உயிர்த்தெழுந்து, ஒரு கிரீடத்தைப் பெற்றுக்கொள்வேன், நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அதை எனக்கு தந்தருளுவார். அவர்களுக்கு மாத்திரமல்ல, ஆனால் அவர்கள் எல்லாருக்கும் தந்தருளுவார்” என்றான், (பிரன்ஹாம் கூடாரத்திலுள்ள அவர்களுக்கும் கூட), அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்“ என்றான். ஆமென். நிச்சயமாக பிசாசு ஒரு சோளக்கொல்லை பொம்மையைத் தவிர வேறொன்றுமில்லை, அவன் வெறுமனே உங்களை ஏதோ வொன்றிற்குள் பயமுறுத்துகிறான். எந்தவிதத்திலும் சட்டப்படியான எந்த உரிமையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய ஒவ்வொரு உரிமையும், அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விட்டன. அவர் கல்வாரியில் மரித்த போதே, அவர் எல்லாவற்றையும் அழித்துப்போட்டார். இதோ அவர் இருக்கிறார், இப்பொழுது இறங்கி வந்து கொண்டிருக்கிறார். 77மோசே தப்பியோடி, அங்கே வெளியே வனாந்தரத்தின் பின்புறத்தில் இருந்து, எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். என்னே, அவன் நாற்பது வருடங் களாக அங்கே வெளியில் இருந்தான், அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவன் சரியாக அங்கே வெளியே போய்க் கொண்டிருந்தான். அவனுடைய மனைவியோ, சிறிய வயதான.... அவள் பெருங் கோபக்காரியான சிறு பெண்ணாக இருந்தாள், மோசேயும் கூட கொஞ்சம் கோபத்தை உடையவனாயிருந்தான், எனவே வெளியே அந்த வனாந்தரத்தின் பின்புறத்தில் அவர்கள் ஒரு பெரிய நேரத்தை உடையவர்களாயிருந்தார்கள் என்பதை நான் கற்பனை செய்து பார்க் கிறேன். நீங்கள் அவ்வாறு கற்பனை செய்யவில்லையா? உங்களை எவ்வாறு அடக்கி பணியவைப்பது என்று தேவனுக்குத் தெரியும். ஆமாம். 78எனவே, ஒரு காலையில், அவன் வளைந்த கோணலான ஒரு பழைய கோலோடு, நெடுகிலும் சிரமத்துடன் நடந்து, எண்பது வயதுள்ளவனாக, வெண்தாடி இந்த விதமாக கீழே தொங்கிக்கொண்டிருக்க, தலைமயிர் கீழே தொங்கிக் கொண்டிருக்க தொடர்ந்து போய்க் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அப்போது அவன் ஒரு பக்கமாக நோக்கிப் பார்த்து, அது ஒரு வினோதமான காட்சியாக இருக்கிறதே“ என்றான். மறுபடியும் உற்றுப் பார்த்து, அந்த மரம் அக்கினியால் வெந்து அழிந்து போகாதிருக்கிறது என்ன? நான் அப்படியே விலகி கிட்டப்போவேன் என்று நம்புகிறேன்” என்றான். சிலசமயங்களில் நீங்கள் அதிக சத்தத்தைக் கேட்டு, அப்படியே விலகிக் கிட்டப்போய், அது என்னவென்று பார்க்கும் போது, இரட்சிக்கப்படுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதிக அக்கினி, உங்களுக்குத் தெரியும்; ஆமாம், பற்றி எரியத் தொடங்குதல், பரிசுத்த ஆவி அக்கினி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கும்போது, ஜனங்கள் மறுபக் கம் திரும்பி, “அதனோடுள்ள காரியம் என்ன?” என்று கேட்கிறார்கள். 79இப்பொழுது மோசே போகாமல் நிற்கத் தொடங்கி, அந்தக் காரியம் வெந்து அழிந்து போகாதிருக்கிறது என்னவென்று அச்சரியமாயுள்ளதே? அரைமணி நேரமாக அது அங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே, இன்னுமாக அது அதை எரித்துப்போடவில்லையே“ என்று கூறினவனாக, மேலே நடந்து சென்று, ”நல்லது, நான் அப்படியே மேலே நடந்து சென்று, அவை எல்லாவற்றையும் குறித்து என்ன வென்று பார்ப்பேன்“ என்றான். அப்போது அங்கிருந்து ஒரு சத்தம் பேசி, உன் பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி“ என்றது. இப்பொழுது அது , -ஐ கழற்றிப்போடு” என்று கூறவில்லை. நான் என்னுடைய தொப்பியைக் கழற்றுவேன் என்று மோசே கூறவில்லை. அவர், “பாதரட்சைகளைக் கழற்றிப்போடு என்று தான் கூறினார்! எனவே அவன் கீழே கரத்தை நீட்டி, தன்னுடைய பாதரட்சைகளைக் கழற்றினான் (flipped off). அவன், “கர்த்தாவே, நீர் யார்?” என்றான். 80அவர், “மோசே!” என்றார். இப்பொழுது, இந்த, 3வது அதிகாரத்தில் துவங்கி, முதலாவது வசனத்திலிருந்து, ஏறக்குறைய 12வது வசனம் வரையில் போகிறது. அவர், “மோசே, என்னுடைய ஜனங்களின் பெருமூச்சுகளைக் கேட்டிருக்கிறேன், என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தேன். (ஓ, அல்லேலூயா!) ஆபிரகாமோடு செய்து கொண்ட என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தேன். நான் அவர்களுடைய கூக்குரல்களையும் புலம்பலையும் கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்திருக்கிறேன்” என்றார். (ஆமென். தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளும்படி இறங்கி வருகிறார்.) இந்நாட்களில் ஏதோ ஒன்றில், அதோ அங்கிருக்கிற அந்தப் பழைய கல்லறைகள், பாட்டியின் கல்லறையின் மேல் பக்கவாட்டில் இருக்கிற கல்லறையின் கல்லானது, அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது, நான் என் வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தேன், அவர்களை விடுவிக்கும்படி நான் இறங்கி வந்திருக்கிறேன். எனக்கோ கவலையில்லை, சற்று நேரத்திலே அது வரட்டும், அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. அல்லேலூயா. கப்பலை யார் வழிநடத்துகிறார் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கும் அது தெரியாதா? அப்படியே அமைதியாக உட்கார்ந்திருங்கள். “அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்திருக்கிறேன்.” “நீர் என்ன செய்யப் போகிறீர்?” “மோசே, நான் உன்னை அனுப்பப் போகிறேன்.” ஓ கர்த்தாவே! என்னையா அனுப்புகிறீர்? என்னால் - என்னால் அதைச் செய்ய முடியாது, கர்த்தாவே.“ “ஓ, ஆமாம். நான் அந்த நோக்கத்திற்காகவே உன்னை இந்த உலகத்தில் வைத்திருக்கிறேன்.” “நல்லது, எனக்கு எண்பது வயதாகிறது, ஒருவிதத்தில் என்னுடைய முதுகு கடினமாக விறைப்பாயுள்ளது, எனக்கு கீல்வாதமும் இருக்கலாம். மேலும் நான் ஒரு வாக்குவல்லவன் அல்ல. என்னால் - என்னால் மிக நன்றாகப் பேச முடியாது.” இப்பொழுது, மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? 81அவன், “கர்த்தாவே, உம்முடைய மகிமையை நீர் எனக்குக் காண்பிப்பீரென்றால், நான் போவேன்” என்றான். ஆமென். (பயப்படாதீர்கள், அந்த வார்த்தைக்கு அப்படியே ஆகக் கடவது“ என்று அர்த்தம், பாருங்கள்.) 'உமது மகிமையை எனக்குக் காட்டும், அப்பொழுது நான் போவேன்.” அந்த ஷெக்கினா மகிமையில் கொஞ்சத்தை நான் பார்க்க விரும்பு கிறேன், நீங்கள் அவ்வாறு விரும்பவில்லையா? ஆம், ஐயா. கர்த்தாவே, உமது மகிமையை எனக்குக் காண்பியும். இப்பொழுது, கர்த்தாவே, உமது மகிமை என்ன, அது என்னவாக உள்ளது?“ “மோசே, உன் கையில் இருக்கிறது என்ன?” அது ஒரு கோல், கர்த்தாவே, இது ஒரு பழைய வளைந்த கோல்.“ அதைத் தரையில் போடு“ என்றார். அவன் அதைத் தரையில் போட்ட போது, அது ஒரு சர்ப்பமாக ஆயிற்று. அவன் குதித்து பின்னால் சென்றான். அவர், ”அதின் வாலைப் பிடித்து தூக்கு“ என்றார். அவன் அவ்வாறு செய்த போது, அது மறுபடியும் ஒரு கோலாயிற்று. ”இப்பொழுது, மோசே, உன்... இருக்கிறது என்ன?“ என்றார். ”உன்னுடைய கரத்தை எடுத்து, அதை உன் நெஞ்சில் (bosom) வை“ என்றார். அவன் அவ்வாறு செய்து, அவனுடைய இருதயத்தின் மேல் வைத்தான்). பிறகு அதை வெளியே இழுத்தான், அப்போது அது வெண்குஷ்டம் பிடித்திருந்தது. பாருங்கள், அதற்கு அர்த்தம் என்னவென்றால் மனிதனுடைய மனசாட்சியாக இருக்கிறது, மனிதனுடைய இருதயமானது வெண்குஷ் டமாக இருக்கிறது, அவனுடைய சிந்தையின் அதே எண்ணங் கள் குஷ்டரோகமாக, பாவமாக இருக்கிறது. அவன் அதை மறுபடியும் தன்னுடைய நெஞ்சில் வைத்து, மீண்டும் வெளியே இழுத்தான். என்ன செய்யப்பட வேண்டியிருந்தது? அது திரும்ப வெளியே வந்த போது, அது வெண்மை யாகவும், சுத்தமாகவும் (cleaned off), ஒரு குழந்தையின் கரத்தைப் போன்றும், மறுகரத்தைப் போன்றும் இருந்தது. அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். அப்படியானால், தேவனுடைய மகிமை என்பது என்னவாக இருக்கிறது? அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்கள், தெய்வீக சுகமளித்தல். கர்த்தாவே, உம்முடைய மகிமையை எனக்குக் காண்பியும்.“ 82அவர் தம்முடைய ஜனங்களை விடுவிக்க ஆயத்தமான போது, மோசே கூட சேர்ந்து வருகிறான், பரிசுத்த ஆவியானவர் அடையாளங்களையும் அற்புதங்களையும், தெய்வீக சுகமளித்தலையும் காண்பிக்கிறார். ஆமென். சரி! அப்போது அவன் தன்னுடைய கரத்தை நோக்கிப் பார்த்து, என்னே !“ என்றான். மேலும், கவனியுங்கள், இது ஒரு நியாயத்தீர்ப்பின் கோலாக இருந்தது. அது அந்தக் கோலாக இருந்தது, அந்தக் கோலானது எப்படியாக எகிப்தின் மேல் அசைத்துக் காட்டப்பட்டது என்பதன் பேரில் நாளை இரவு பாடத்தில் நாம் அதைக் காண்போம். அது.... அல்ல. அது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோலாக இருந்தது. தேவ னுடைய நியாயத்தீர்ப்பைப் பிடிக்கிற கரமானது சுத்தமாக இருந்தாக வேண்டும், ஆமென், அவனுடைய குஷ்டரோகத்திலிருந்து சுத்தமாக்கப்பட்ட ஒரு கரம். அவன் அதைப் பிடித்துத் தூக்கின போது, அவர், இப்பொழுது, எகிப்தில் அதைத் தொடங்கு. உன்னுடைய சகோதரன் இங்கே பாதையில் இருக்கிறான், அவன் உனக்கு ஒரு தீர்க்கதரிசியாக இருப்பான், நீ அவனுக்கு தேவனைப் போலிருப்பாய்” என்றார். 83இதோ மோசே போகிறான், அவன் வந்து, எத்திரோ, நான் இன்று உம்மை விட்டுப் போயாக வேண்டும்“ என்றான். அவன் அவசர அவசரமாய் ஒரு வயதான கோவேறு கழுதையைக் கொண்டு வந்து, அதன்மேல் இவ்விதமாக கண்ணிக்கயிற்றைப் (halter) போட்டு, அவனுடைய மனைவியின் கால்களை இந்த வயதான கோவேறு கழுதையின் இரண்டு பக்கங்களிலும் போட்டபடி உட்கார வைத்து, பிள்ளைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இடுப்பிலும் வைத்தபடி, இதோ அவள் போகிறாள். உங்களால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு வயதான மனிதன், அவனுக்கு எண்பது வயது, மீசையும், நீண்ட தாடியும், நீண்ட தலைமயிரையும் கொண்டவனாய், தன்னுடைய கையில் கோணலான ஒரு கோலை வைத்துக்கொண்டு, ஒரு வயதான கழுதையை நடத்திக்கொண்டு, அதன்மேல் இரண்டு குழந்தை களோடு ஒரு பெண்ணும் உட்கார்ந்திருக்க, எகிப்தைக் கைப்பற்ற போய்க் கொண்டிருக்கிறான்? அவ்விதமான ஒரு காட்சியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? “மோசே, நீ என்ன செய்யப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று அவர்களில் சிலர். 84“இதோ நான் போகிறேன்.” என்னே , அவன் ஒரு பெரிய நேரத்தைக் கொண்டிருந்தான். “சிப்போராளே, வா” அது அவனுடைய மனைவி என்று உங்களுக்குத் தெரியும். அந்த வயதான கழுதையையும் கூட இழுத்தபடி, சேர்ந்து (போகிறான்). அவன், “வா, நாம் எகிப்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம், அதைக் கைப்பற்றும்படி போய்க் கொண் டிருக்கிறோம்” என்றான். எகிப்து என்பது ரஷ்யாவைப் போன்றது. அது மிகப்பெரிய இயந்திரமயமாக்கப்பட்ட (தானியங்கி) பிரிவுகளாக இருந்தது, எகிப்தில் உலகத்திலேயே மிகப்பெரிய இராணுவம் இருந்தது. அதனால் முழு உலகத்தையும் துரத்தியடிக்கவும், தரை மட்டும் தோற்கடிக்கவும் முடிந்தது. அதைத்தான் மோசே கைப்பற்றப் போய்க் கொண்டிருந்தான். தன்னுடைய கையில் ஒரு கோலை வைத்துக்கொண்டுள்ள ஒரு வயதான மனிதன், மனைவி ஒரு கோவேறு கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டிருக்க, ஒவ்வொரு இடுப்பிலும் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, இதோ அவள் போய்க் கொண்டிருந்தாள், அவர்கள் கைப் பற்றும்படி போய்க் கொண்டிருந்தார்கள். ஏன்? தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். தேவனுக்கு மகிமை! 85காதேஸ் பர்னேயாவிலும் அதேவிதமாகத்தான் இருந்தது. தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார், யோசுவா, நம்மால் அதைச் செய்ய முடியும், ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறியிருக்கிறார்!“ என்றான். அவர்கள் அங்கே இருக்கிறார்கள், எகிப்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மேலும் இப்பொழுது ஒரு மனிதன் எவ்வளவாக புறக்கணிக்கப்பட முடியும் என்பதைக் கவனியுங்கள். சத்திரத்தில் (வழிப்போக்கர் தங்கும் இடம்), தேவன் இங்கே அந்த சத்திரத்தில் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொன்றிருப்பார், சிப்போராளோ போய் ஒரு கருக் கான கல்லை எடுத்து, ஒரு கருக்கான கல்லைக் கொண்டு, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம் பண்ணி, அந்த நுனித்தோலை மோசேக்கு முன்பாக எறிந்து, “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்றாள், அது மாத்திரமே மோசேயின் ஜீவனைக் காப்பாற்றியது. மோசே என்ன செய்து கொண்டிருந்தான்? மோசே அங்கே போகும் படியான அப்படிப்பட்ட ஒரு ஒரு இடத்தில் இருந்து, அவன் விருத்தசேதனம் என்ற முத்திரையையே மறந்துபோகும் அளவுக்கு அவன் அத்தகைய ஓய்வேயில்லாமல் அந்நாளின் பரபரப்பில் இருந்தான். 86நாமும் இன்று அங்கே தான் செய்து கொண்டிருக்கிறோம். ஹோலினஸ் சபைகளும் அங்கே தான் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. நமக்கு நிறைய நேரமுண்டு, கர்த்தர் நமக்கு ஏராளமான பணத்தைத் தந்திருக்கிறார், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய தேவனுடைய முத்திரையை நாம் மறந்துவிடும் அளவுக்கு, மகத்தான பெரிய சபைகளையும், பெரிய கூர்கோபுரங்களையும் (spires) நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம், பட்டு, பருத்தி கம்பளத்தால் ஆன மெத்தென்ற இருக்கைகளையும், பைப் ஆர்கன் இசைக் கருவிகளையும் வைத்துக் கொள்கிறோம். அது உண்மை! தேவனே, எங்களுக்கு ஒரு - ஒரு சிப்போராளை அனுப்பும். அது சரியே. விருத்தசேதனம்! விருத்தசேதனம் பண்ணப்படாமல் எகிப்தில் இருந்த இஸ்ரவேலனாகிய ஒவ்வொரு ஆணும் அறுப்புண்டு போகப்பட்டான். விருத்தசேதனமானது வாக்குத் தத்தத்தின் முத்திரையாக இருந்தது. மேலும் பழைய ஏற்பாட்டு விருத்த சேதனமானது புதிய ஏற்பாட்டினுடைய பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்துக்கு வெளியேயிருக்கிற ஒவ்வொரு மனிதனும் அறுப்புண்டு போகப்படுவான். அங்கே தான் காரியம். தேவனே, இரக்கமாயிரும்! 87நான் உங்களைக் களைப்படையச் செய்கிறேன் என்று எனக்கு - எனக்கு - எனக்குத் தெரியும், ஆனால் நான் அப்படிப் பட்ட ஒரு நேரத்தை உடையவனாயிருக்கிறேன்! நான், நல்லது, ஒருக்கால் நான் நிறுத்த வேண்டியிருக்கலாம். சரி. அப்படியானால் நாளை இரவில் 4வது வசனத்தில், 4வது அதிகாரத்தில் தொடங்கலாம். யேகோவா, இங்கேயுள்ள 4வது அதிகாரத்தின், 3வது அதிகாரத்தின் கடைசி பாகத்தில், இருக்கிறவராக இருக்கிறேன் என்ற தம்முடைய நாமத்தை அறியப்பண்ணுகிறார். 'யார் என்னை அனுப்பியது என்று நான் சொல்லப் போகிறேன்?“ ”இருக்கிறவராகிய நான்“ என்றார். ஜனங்கள் அதை நம்ப மாட்டார்கள்” என்றான். இருக்கிறவராகிய நான் உன்னை அனுப்பினேன் என்று அவர்களிடம் சொல்லு. இருக்கிறவர்.“ ”இருந்தவரோ, இருப்ப வரோ“ அல்ல. ஆனால் ”இருக்கிறவர்,“ அது நிகழ்காலமாக இருக்கிறது. 88ஒருநாள் அந்த யூதர்கள் அங்கே நின்று தண்ணீரைக் குடித்து, களிகூர்ந்து கொண்டும், தாங்கள் வனாந்தரத்தில் புசித்த அந்த மன்னாவைக் குறித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்போது அந்தப் பண்டிகையிலே, இயேசு ஜனங்கள் மத்தியில் நின்று, சத்தமிட்டார், அது பரிசுத்த யோவான் 6. அவர்கள், “ஏன், எங்கள் பிதாக்கள் வனாந் தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்” என்றார்கள். அதற்கு அவர், அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள். ஆனால் நானே பரலோகத்திலிருந்து தேவனிடத்திலிருந்து வந்த ஜீவ அப்பம், நீங்கள் விரும்பினால், ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவ விருட்சம் நானே. பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம் நானே. ஒருவன் இந்த அப்பத்தைப் புசித்து, இந்த இரத்தத்தைப் பானம் பண்ணுவானானால், என் இரத்தத்தைப் பானம் பண்ணி, என் மாம்சத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு, நான் கடைசி நாளில் அவனை எழுப்புவேன்“ என்றார். 89அவர்கள், “இவன் தூஷணம் சொல்லுகிறான். இவன் தன்னுடைய சரீரத்தைப் புசிக்கும்படியாக எப்படி நமக்குக் கொடுக்கப் போகிறான்? நல்லது, இப்பொழுது, நமக்குத் தெரியும் ! நாம் மோசேயை விசுவாசிக்கிறோம். மோசே நம்முடைய -நம்முடைய தீர்க்கதரிசி. நாம் மோசேயை விசுவாசிக்கிறோம். நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்திலே நாற்பது வருஷமாய் மன்னாவைக் கொண்டு போஷிக்கப்பட்டார்கள்” என்றார்கள். அவர், அது எனக்குத் தெரியும். நான் அதை அறிவேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள். ஆனால் நானே ஜீவ அப்பம்“ என்றார். “ஏன்!” அவர்கள், “நல்லது, நீ அதையா என்னிடம் கூற வருகிறாய்?” என்றார்கள். வனாந்தரத்திலிருந்த அந்தக் கன்மலை அவரே. வனாந்தரத்திலிருந்த அந்த மன்னா அவரே. ஆலயத்தில் இருந்த சமுகத்தப்பங்கள் அவரே. ஓ, யோர்தானில் இருந்த தண்ணீர்கள் அவரே. மகிமை! அவரே அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருந்தார். இருந்தவரும், இருக் கிறவரும், வருகிறவரும் அவர் தான். ஒரு உலகம் அங்கே இருப்பதற்கு முன்பே அவர் இருந்தார். உலகம் எதுவும் அங்கே இல்லாமல் போகும் போதும் அவர் இருப்பார். அவர் தாவீதின் வேரும் சந்ததியும், விடிவெள்ளி நட்சத்திரமும், பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமும், சாரோனின் ரோஜாவுமாய் இருக்கிறார். அல்லேலூயா! தாவீதின் வேர் சந்ததி இரண்டும் (அவரே), அல்லேலூயா தாவீதுக்கு முன்பும், தாவீதுக்குள்ளும், தாவீதுக்குப் பிறகும்! மகிமை! இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையில் நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன். அவர் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அவர் ஒரு நல்ல மனிதனைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அவர் மாம்சத்தில் திரை மறைக்கப்பட்டிருந்த தேவனாக இருந்தார், தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர் தான் அது. அவர் யாராக இருந்தார் என்பதைக் குறித்து, ஒரு சில இரவுகளில் நாம் அதற்குள் வருவோம். ஆகையால் தான் உங்களால் விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியவில்லை, ஏனென்றால் அவர் யாரென்று உங்களுக்குத் தெரியவில்லை. 90“ஏன்,” அவர்கள், “நீ ஆபிரகாமைக் கண்டதாக சொல்லுகிறாய், உனக்கு இன்னும் ஐம்பது வயது ஆகவில்லையே” என்றார்கள். அந்த மனிதருக்கு முப்பது வயதைத் தவிர வேறெதுவுமில்லை. அவர் களைப்படைந்தவராக இருந்தார், அவருடைய வேலைகள் அவரை மெலிந்தவராக ஆக்கியிருந்தது. அவர்(கள்), “நீ ஐம்பது வயதுக்கு மேல் ஆகாத ஒரு மனிதன், மரித்து எண்ணூறு அல்லது தொள்ளாயிரம் வருடங்கள் ஆகியிருக்கிற ஆபிரகாமை நீ கண்டாய் என்றா சொல்லுகிறாய்?” என்றார்கள். கவனியுங்கள்! அவர், ஆபிரகாம் இருப்பதற்கு முன்பே, நான் இருக்கிறேன் என்றார். அல்லேலூயா! “நான் யோகோவா.” அவர் யோகோவா -மனாசேயாக இருக்கிறார். அவர் யோகோவா -ரப்பாவாக இருக்கிறார்! அவர் யேகோ -... ஓ, அவர்.... யேகோவாவின் மீட்பின் நாமங்கள் எல்லாம் அவருக்குள் இருந்தன, தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது; அதோ அவர் இருக்கிறார். 91“நான் அவர்களை விடுவிக்க இறங்கி வந்திருக்கிறேன். நான் என்னுடைய நாமத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா தலைமுறைகள் தோறும் அது ஒரு ஞாபகார்த்தமாக இருக்கும் என்று அவர்களுக்குச் சொல்லு, நான் இருக்கிறவராக இருக்கிறேன். 'நான் இருந்தேன்' என்றோ, அல்லது 'இருப்பேன்' என்றோ அல்ல. நான் இருக்கிறேன்!” அங்கே அந்த இரவில் இருந்த அதே தேவன் தான் இங்கே இன்றிரவிலும் இருக்கிறார்! இப்பொழுது, நான் உனக்கு முன்னே போகிறேன், நான் என்னுடைய தூதனானவரை அனுப்பப் போகிறேன், அவர் ஒரு அக்கினிஸ்தம்பமாக இருக்கப் போகிறார். இப்பொழுது, ஒரு அக்கினிஸ்தம்பமாக அவரை உனக்கு முன்னே அனுப்பப் போகிறேன், அவர் உன்னை வழிநடத்துவார்.“ ஒரு அக்கினிஸ்தம்பம்! அவ்வளவு பெரிய, ஒரு ஸ்தம்பத்தைப் (தூணைப்) போன்று. உன்னை வழிநடத்தும்படி, ஒரு அக்கினிஸ்தம்பம் உனக்கு முன்னே போவார். இருக்கிறவர் அந்த அக்கினிஸ்தம்பத்தில் இருப்பார்.” 92இப்பொழுது பிரன்ஹாம் கூடாரத்திடம் தான், தொடர்புடையவர்களாய் இருந்து, இந்தச் சத்தியங்களை அறிந்து கொள்ளும் உங்களிடம் தான், அந்த அதே அக்கினிஸ்தம்பம் தான் இன்றிரவும் நம்மோடு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதோ அங்கே அவருடைய புகைப்படமானது எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா, இப்பொழுது அது எப்படியாக உலகம் முழுவதும் பரவிச் சென்றிருக்கிறது, அங்கே பின்புறத்தில், எரிகிற முட்செடியில் மோசேயை பின்தொடர்ந்த அதே அக்கினிஸ்தம்பம் தான் அது. அது என்னவாக இருக்கிறது? இங்கேயிருக்கும் எந்தப் பண்டிதரும்... தைரியம் கொள்ள மாட்டார்கள். இந்த வார்த்தைகளோடும் காரியங்களோடும் நான் இங்கே பிரயாசப்பட்டு நடந்து சென்றாலும், நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். பரிசுத்த ஆவியினாலே, என்னுடைய தலையானது சரியானதின் பேரில் திருகப்பட்டுள்ளது (screwed) என்று நம்புகி றேன். நான் உங்களிடம் கூறட்டும், வனாந்தரத்தினூடாக இஸ்ரவேல் புத்திரர்களைப் பின்தொடர்ந்த அந்தத் தூதனா னவர் தான் உடன்படிக்கையின் தூதன் என்று இங்கேயி ருக்கும் எந்தப் பண்டிதரும் அறிவார்கள், மேலும் அந்த உடன்படிக்கையின் தூதனானவர் இயேசு கிறிஸ்துவாக இருந்தது. மோசே எகிப்திலுள்ள சகல பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களையே பெரிய பொக்கிஷமென்று எண்ணினான். அது சரிதானா? நிச்சயமாக, உடன்படிக்கையின் தூதனானவர்! அப்படியானால் இங்கே நம்மோடிருக்கும் அது என்ன? நமக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்றோ , நாம் இதுவாகவோ, அதுவாகவோ, அல்லது மற்றதாகவோ, ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள் என்றோ, அல்லது ஏதோ வொன்று என்று அவர்கள் கூறலாம், ஒருக்கால் அவர்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் தேவன் இஸ்ரவேல் புத்தி ரர்களை வழிநடத்தின அதே அக்கினிஸ்ம்பத்தில், சரியாக இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று தம்மைத்தாமே நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா! தேவனுக்கு மகிமை! முன்பு அதோ அங்கே இயேசு கிறிஸ்து நின்றுகொண்டு, அங்கே நின்று கொண்டிருந்த அந்தப் பரிசேயர்களிடம் கூறின போதும், கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம், அவளுடைய இரகசிய பாவங்கள் எங்கேயிருந்தது என்றும், மேலும் அதைப் போன்ற மற்ற காரியங்களையும் கூறின போதும், இயேசு கிறிஸ்துவோடு இருந்த அதே ஒருவர், அதுதான் இப்பொழுது நம் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறது. இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமானவர்!“ அல்லேலூயா! நான் அவருக்காக எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன், நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள் தானே? தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! எல்லா ஊகங் களும் போய் விட்டன. ஓ, என்னே! 93மகிமையின் ராஜகுமாரன் மரித்த, அவ்வற்புத சிலுவையை நான் கண்ணோக்கும் போது, என்னுடைய கௌரவம் எல்லாம் வீண் நஷ்டமாக எண்ணினேன், ஏழை ஈனனாகிய... ஓ, பாவியான என்னுடைய நண்பனே, உங்களால் எப்படியாக நின்றுகொண்டு, அவர்களை வழிநடத்தும்படியான அந்த அக்கினிஸ்தம்பத்தோடு, அதோ அங்கிருக்கிற அந்த மகத்தான சபையை, அதனுடைய முன்னிழல்களில், ஒன்று சேர்க்கப்பட்டு, காண முடிந்து, சரியாக இன்றைக்கும் இங்கே திரும்பிப் பார்க்க முடிகிறது! எத்தனைபேர் அந்தக் காட்சி யைப் பெற்றுக் கொண்டீர்கள்? நாங்கள் உங்கள் கரத்தைப் பார்க்கட்டும். அந்தக் காட்சியைக் கொண்டிருப்பது எத்தனை பேருக்குப் பிடிக்கிறது? உங்கள் கரங்கள் உயர்த்தப்படுவதை நாங்கள் காணட்டும். உங்களிடம் காண்பிக்கும்படியாக, நான் நாளை இரவு அவர்களை இங்கே கொண்டிருப்பேன். சரி. அதோ அது இருக்கிறது, சரி என நிரூபிக்கப்பட்ட ஒன்று! 94முப்பதாயிரம் ஜனங்களும், மற்றும் குற்றம் கண்டு பிடிப்பவர்களும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். நான், நான் ஒரு சுகமளிப்பவன் என்று உரிமை கோருவதில்லை. நான் அவ்வாறு உரிமை கோருவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் சத்தியத்தைக் குறித்து மாத்திரமே பேசுகிறேன். அங்கே மேலேயுள்ள ஒரு சிறு கென்டக்கி அறையில் நான் பிறந்த போது, கர்த்தருடைய தூதனானவர் ஜன்னலுக்குள் வந்து, அங்கே நின்றார். அங்கே ஒரு அக்கினிஸ்தம்பம் இருந்தது. தேவன் அதை நிரூபித்திருக்கிறார். நான் சத்தியத்தைக் கூறுவேன் என்றால், தேவன் அந்த சத்தியத்தை சரி என நிரூபிப்பார். நான் ஒரு பொய்யனாக இருந்தால், தேவன் என்னோடு எதையுமே செய்ய மாட்டார்“ என்றேன். ஏறக்குறைய அந்நேரத்தில், அவள் வியூ என போனாள்! இதோ அவர் வருகிறார். அமெரிக்க புகைப்படக்காரர் சங்கம், அவர்கள் எல்லாருமே அங்கே இருந்தார்கள், லுக், லைஃப், டைம்ஸ், கோலியர், மற்றும் அவர்கள் எல்லாருமே அங்கே யிருந்தார்கள். அமெரிக்க புகைப்படக்காரர்கள் சங்கமானது அதன் புகைப்படத்தை எடுத்து, இது மனோதத்துவம் தான் என்று நம்புகிறேன். நாங்கள் இதற்கு முன்பு அதைக் கண்டிருக்கிறோம், ஆனால் நான் நம்புகிறேன்...' என்றார்கள். அவர்கள் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். மேலும், அங்கே, அந்த ஒளியானது லென்சின் மேல் பட்டிருந்தது. அவர்கள் அதை ஜார்ஜ் ஜெ. லேஸி அவர்களிடம் கொண்டு சென்றனர். அவர்களால் முடிந்த எல்லாவற்றின் கீழேயும் அதை வைத்தனர். இப்பொழுதோ அது வாஷிங்டன், டிசியில் உள்ள புகழ்வாய்ந்த மன்றத்தில் (hall of fame) தொங்கிக் கொண்டிருக்கிறது. அல்லேலூயா! அது என்னவாக இருக்கி றது? அவர்கள் பரிசுத்த உருளையர்கள் என்று அழைக்கிற அந்தக் கூட்டத்தினரோடு இயேசு கிறிஸ்து. தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. 95எப்பொழுதாவது தீட்டப்பட்ட ஒவ்வொரு பிரபலமான ஓவியமும் முதலில் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களின் மன்றம் வழியாகப் போயாக வேண்டியிருந்தது. ஆனால் அங்கே கடைசி இராப்போஜனத்தை அவர்கள் வரைந்த போது, அது குற்றம் கண்டுபிடிக்கிறவர்களின் மன்றம் வழியாகச் சென்றது. ஏன், அவர்கள் குற்றம் கண்டுபிடித்தார்கள். அது அவனுடைய வாழ்நாளையே அவனுக்கு கிரயமாகக் கொண்டு விட்டது, ஆனால் இப்பொழுதோ அது புகழ்வாய்ந்த மன்றத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது குற்றம் கண்டுபிடிக்கிறவர்களின் மன்றம் வழியாகப் போயாக வேண்டும். மேலும், சகோதரனே, சகோதரியே, நாம் இதில் துவங்கினபோது, அதோ அங்கே பல வருடங்களுக்கு முன்பு, நீண்ட காலத்திற்கு முன்பு, இந்தப் பரிசுத்த ஆவி மார்க்கத்தை அவர்கள் எப்படி அழைக்கிறார்களோ அதில் துவங்கின போது, நாம் சிறிய பழமையான தொழுவங்களுக்குள், யாரோ ஒருவருடைய வீட்டில், எங்கேயோ தெருவோரத்திலுள்ள ஒரு சிறிய கடைமுகப்பிற்குள் (store-front) போக வேண்டியிருந் தது, பாவிகள் வெளியே நின்று மெல்லும் பிசினை (chewing gum) மென்றுகொண்டு, சிரித்துக்கொண்டும், நகைத்து ஏளனம் செய்துகொண்டும், நம்மை பரிசுத்த ஊருளையர்கள் என்று அழைத்துக்கொண்டும் இருந்தார்கள். மேலும் சிறைச்சாலையில் உறங்கிக்கொண்டும் மற்ற எல்லாவற்றையும் செய்தார்கள். அது சரியே. அவர்கள் அடிக்கப்பட்டார்கள், அவர்கள் கேலி செய்யப்பட்டார்கள். 96அன்றொரு நாள் ஒரு சிறிய வயதான பிரசங்கியார் என்னுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார், அவர்கள் அவரை ஒரு பட்டணத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள், அவர்கள் அவரையும் அவருடைய மனைவியையும் வெளியே அனுப்பி விட்டார்கள். அவருடைய குழந்தைகளைப் போஷிப்பதற்காக..... அவர்கள் வெளியே அந்தப் போர்வைகளின் மேல் உறங்கினார்கள், அவைகள் ஈரமான போர்வைகளாக இருந்தன, அவைகளைக் காயப் போடும்படிக்கு, அவர்கள் அவைகளை காலையில் மேலே மரங்களில் தொங்கவிட்டார்கள். அதன்பிறகு அவர்கள் கீழே அந்த இரயில் பாதைக்குச் (railroad track) சென்று, ஒரு நேரத்தில் சோள தானியத்தைப் பொறுக்கினார்கள். அவர்க ளிடம் ஒரு சிறிய பழைய வாணலி இருந்தது, அவர்கள் அதை ஒரு பாறையில் வைத்து அடித்தார்கள், அவர்கள் சோளத்தை அடித்தெடுப்பதை வைத்து, ஒரு நேரத்தில் பன்னிரண்டு அல்லது பதினான்கு நாட்கள் ஜீவனம் பண்ணி னார்கள். என்னுடைய வயதான மேலாளராகிய வயது சென்ற சகோதரன் பாஸ்வர்த் அவர்கள், தேவன் அவருடைய இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, அவர் இன்றிரவு அதோ அங்கிருக்கிற ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் இருந்து, நான் அங்கே போவதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் அதோ அங்கிருக்கிற டெக்ஸாஸில் படுத்திருந்தார், அவர்கள் அவருடைய தொண்டையை வெட்டிவிடுவதாக பயமுறுத்தப் பட்ட போதும், மற்ற எல்லாமும் அவருக்குச் சம்பவித்த போதும், அவருடைய முதுகில் தழும்புகள் உண்டாக அடிக்கப்பட்டார். அவர் ஒரு உடைந்த மணிக்கட்டோடு நடந்து, அவருடைய சூட்கேஸை எடுத்துச்செல்ல முயன்று கொண்டிருந்தார். அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணினதற்காக அடிக்கப்பட்டார். “கைவிடப்பட்டவர்களாய், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு வனாந்திரமான இடங்களில் திரிந்தார்கள்; ஏற்றுக்கொள்ள, உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருப்பதில்லை.” 97அந்தப் பெரிய சபைகள் கேலி செய்து, தங்கள் விரல்களால் சுட்டிக்காட்டினார்கள். நாம் பரிசுத்த உருளையர்கள் என்று அவர்கள் கூறினார்கள். நான் .... ஐ கட்டின போது, அங்கே மூலைக்கல்லை வைத்தேன், அந்தச் சிறு பழைய கட்டிடத்தை) ஒரு மோட்டார்வண்டி பழுதுபார்க்கு மிடமாக அவர்கள் ஆக்கிவிடுவார்கள் என்று அவர்கள் கூறினார்கள். அது இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது, பரிசுத்த ஆவியானவர் இன்னும் இங்கே ஜீவித்துக் கொண்டுதானிருக்கிறார். அல்லேலூயா! அது சரியே. மேலும், மதவெறித்தனம் என்றும் மற்றும் எல்லாமாகவும் அவர்கள் கூறின அதை, உலகம் முழுவதுமுள்ள (across the world) இராஜாக்களும் ஆட்சியாளர்களும் அழைத்திருக்கிறார்கள்! மகத்தான மனிதர் சுகமடைந்திருக்கிறார். இப்பொழுது நாம் மில்லியன் கணக்கானவர்களாக திடமாக நின்று கொண்டி ருக்கும் அளவுக்கு, தேவனுடைய வல்லமைகள் உலகத்தைச் சுற்றிலும் வீசியடித்துச் சென்றிருக்கிறது. அல்லேலூயா! மேலும் இந்தக் காலைகளில் ஒன்றில்.... அவள் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களினுடாகப் போயிருக்கிறாள், அது அக்கினியால் முற்றிலும் அழிந்து போகும் என்று கூறினார்கள். அவர்கள் இங்கே என்னிடம், ஓ, பில்லி, உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. அங்கே அதற்கு இருப்பதெல்லாம் அவ்வளவுதான்“ என்று கூறினார்கள். என்னுடைய சொந்த மாமியார் கூட, ”ஏன், இந்தப் பையனுக்கு பித்துபிடித்து விட்டது“ என்றார்கள். ஆனால், நான் அவ்வாறு இருப்பேன் என்றால், நான் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண் டிருக்கிறேன். 98சகோதரனே, நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கூறட்டும். இதற்குக் கவனம் செலுத்துங்கள், நான் இதை மரியாதையுடன் கூறுகிறேன். அல்லேலூயா! முழு நரகமும் இதை நிறுத்த முடியாது. இது இவ்வாறு இருக்க வேண் டுமென்று இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்பட்டுள்ளது, இது அவ்வாறு தான் இருக்கும். “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” எப்படி, அது என்னவாக இருக்கிறது, அது எம்மாதிரியான ஒரு சபையாக இருக்கிறது? “பேதுருவே, மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். அதுதான் பரிசுத்த ஆவியானவர் மூல மாக உள்ள, தேவனுடைய வார்த்தையைக் குறித்த ஆவிக் குரிய வெளிப்பாடு. இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது. அவள் தொடர்ந்து முன்னே சென்று கொண்டே யிருக்கிறாள். 99இப்பொழுது, சகோதரனே, அவள் கேலி செய்யப் பட்டும் உபத்திரவப்பட்டும், எதிர்க்கப்பட்டும் மற்றும் எல்லாம் செய்யப்பட்டும் இருந்திருக்கிறாள், இந்த மகிமையான காலைகளில் ஒன்றில், அல்லேலூயா, தமது ஊழியக்காரர்களை சுட்டிக்காட்டிக் கொண்டு, மகிமையில் நிற்கிற மகத்தான ஏஜமானர்... “பராக்கிரமத்தினாலும் அல்ல, பலத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். வேதசாஸ்திரத்தினாலும் அல்ல, இலக்க ணத்தினாலும் அல்ல, இந்த மற்ற காரியங்களினாலும் அல்ல; ஆனால் தேவ குமாரனிடத்திலும், அவருடைய வார்த்தையில் அவர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதிலுள்ள எளிய, பரிசுத்தமான, கலப்படமற்ற விசுவாசத்தினாலேயும் ஆகும். அவர் ஒரு படத்தை வரைந்து கொண்டிருக்கிறார் (painting). அவர் ஒரு படத்தை வரைந்து கொண்டிருக்கிறார். அது என்ன? உலகத்தோற்றத்துக்கு முன்பே, அதோ அங்கே அவருடைய மகிமையில் வெளிப்படும்படியாக, அவர் முன் குறித்திருக்கிற பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு சபை. இந்தக் காலைகளில் ஏதோ ஒன்றில், அவர் பரலோ கத்திலிருந்து சீக்கிரமாய் இறங்கி வருவார், அல்லேலூயா, அப்போது அவர் ஒரு மகத்தான காந்தம் போன்று, உபத்திரவம் அனுபவித்து வருகிற அந்தச் சிறு சபையை மேலே எடுத்துக்கொண்டு (pick up), அதோ அங்கிருக்கிற அவளுடைய புகழ்வாய்ந்த மன்றத்தில் தொங்கவிடுவார், அவள் ஆகாயத்தினூடாகப் போகும்போது, “இந்த மாம்ச அங்கியைக் கீழே போட்டுவிட்டு, நான் மேலே எழும்பி, நித்தியமான பரிசைப் பிடித்துக்கொள்வேன். ஆகாயத்தி னூடாக செல்லும்போது சத்தமிடுவேன், விடைபெறுகிறேன்! விடைபெறுகிறேன்! இனிய ஜெபவேளையே!” என்று சத்த மிடுவாள். ஆமென்! 100பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். என்ன காரியம் என்று தெரியவில்லை, எப்படியும் இந்தப் பாடத்திற்குள் போக முடியவில்லை. பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டு, சடுதியாய் ஏதோவொன்றைச் செய்யத் தொடங்கி, அப்புறமாக போய்க் கொண்டிருக்கிறார். ஓ, நாங்கள் உமக்கு நன்றி செலுத்து கிறோம், உமது அன்புக்காகவும் வல்லமைக்காகவும் எங்களுடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமக்கு நன்றி, கர்த்தாவே, இங்கே இந்த மகத்தான இருண்ட காலத்தில்... ஒரு தாழ்மையான ஜனத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். சுயதிருப்தியுள்ளவர்களும், ஓ, பெருமையுள்ளவர்களாயும், மேட்டிமைச் சிந்தை யுள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருக்கிற இந்த மகத்தான நேரத்தில், இவைகள் இருக்குமென்று பிந்தைய காலங்களில் ஆவியானவர் அதை வெளிப்படையாய் பேசுகிறார். உம்முடைய வார்த்தையில், 2 தீமோத்தேயு 3-ல், அவர்கள், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்“ இருப்பார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது, வேறு யாரைக் காட்டிலும் அதிகம் தெரியும் என்பது, இறுமாப்புள்ளவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று செல்லப்பட்டுள்ளது. 101தேவனே, அந்நாளில் உமக்கு ஒரு சிறு சபை உண்டாயிருக்கும் என்று சொல்லியிருக்கிறீர், “பயப்படாதே, சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” என்று கூறியிருக்கிறீர். ஒரு பாவமுள்ள குடும்பத்தில் பிறந்து, ஒரு விஸ்கி (சாராய) பீப்பாயின் மேல் வளர்ந்த, அதோ அங்கே வெளியே பாவத்தில் இருந்த ஒரு பரிதாபகரமான குருடாயிருந்த ஈன பாதகனாகிய என்னுடைய ஏழை கண்களை நீர் எப்பொழுதாவது திறந்தீரே, அதற்காக உமக்கு நன்றி, கர்த்தாவே. ஓ, ஆனால், தேவனே, நீர் எவ்வளவாக பாதுகாத்து, உதவி செய்து, ஆசீர்வதித்து, திருப்திபடுத்தியிருக்கிறீர்! நான் எவ்வளவாக என்னுடைய உணர்ச்சிகளை உமக்கு வெளிப்படுத்த முடியும், கர்த்தாவே? ஓ தேவனே, இது வெறுமனே துவக்கமாக இருக்கட்டும், கர்த்தாவே, நான் மறுபடியுமாக உலகத்தின் மூலைகளுக்கும், எல்லா இடங்களுக்கும் சென்று, விடுதலையின் செய்தியையும் இரட்சிப்பின் செய்தியையும் பிரகடனம் செய்ய என்னால் முடியுமே. 102தேவனே, இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாதது போன்று, இந்தச் சிறு பழைய சபையை குலுக்கும். பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கேயிருக்கும் ஒவ்வொரு நபரையும் கட்டுக்குள் எடுத்துக்கொள்வாராக, ஏனென்றால் இங்கே பழைமை நாகரீகமான எழுப்புதல் சடுதியாய் வெடித்து கிளம்பி, கர்த்தாவே, இங்கே வெளியே எல்லாவிடங்களிலும் (அந்த எழுப்புதல்) துரிதமாகக் கடந்து போய், மனிதர்களையும் ஸ்திரீகளையும் தேவனிடம் திருப்பிக் கொண்டு வரும் ஒரு பழமை நாகரீகமான நேரத்தை அனுப்பும் மட்டுமாக, அவர்கள் உபவாசித்து ஜெபித்து, பகலும் இரவும் முகங்குப்புற விழுந்து (lay on their face), உரக்க சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் (screaming out), கர்த்தாவே. இதை அருளும், பிதாவே, நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். ஆமென். நாம் எழுந்து நிற்போமா. ஓ, நான் அவரைக் கண்டு, அவரது முகத்தை நோக்கிட வாஞ்சிக்கிறேன், அங்கே அவரது இரட்சிப்பின் கிருபையைப்பற்றி என்றென்றும் பாடுவேன்; மகிமையின் தெருக்களில் நான் எனது சத்தத்தை உயர்த்திடுவேன், அப்பொழுது கவலைகள் யாவும் தீரும், என்றும் மகிழ்ந்திட இறுதியில் (பரம) வீட்டில் (வந்திடுவேன்). 103அல்லேலூயா, இங்கே பக்கத்தில் கீழே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அந்தச் செய்திகளை நான் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்த போது, வழக்கமாக ஒரு வயதான மனிதர் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது என் நினைவுக்கு வருகிறது, அவர் அழுது கொண்டு, அவருடைய கண்களிலிருந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தமது கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக்கொள்வார். ஏதோ வொரு பிரகாசமான நாளில், நான் போய் அவரைக் காண்பேன்! நான் அங்கே நோக்கி, அதோ அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த வேறொருவரையும் வயதான சகோதரி வெபர் அவர்களையும் காண்கிறேன். அந்த வித்தியாசமான நபர்கள் என் ஞாபகத்தில் வருகிறார்கள். வழக்கமாக பாடகர் குழுவில் பாடுகிற சகோதரி ஸ்நெல்லிங் அவர்களும், சிவப்பு தலைமயிரை உடைய வயதான சிறிய சகோதரன் ஜார்ஜ் அவர்களும் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருப் பார்கள், அவர்கள் எங்கேயிருக்கிறார்கள்? அல்லேலூயா! அவர்கள் அதோ அங்கே தூரமாக நெஞ்சுக்குள் வைத்து எடுத்துச்செல்லப்பட்டு, அல்லேலூயா, தேவனுடைய இராஜ்யத்துக்குள் முத்திரைபோடப்பட்டுள்ளார்கள். அவர்கள் போன போது, நான் அவர்களைக் கவனித்தேன். சிறிய சகோதரன் ஜார்ஜ் அவர்கள் அங்கே மரித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன், அவர் தொடர்ந்து கதவினூடாகப் பார்த்துக் கொண்டேயிருந்து, huff, huff என்று மரித்துக் கொண்டிருந்தவாறு, “எங்கே...? என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்றார். (இன்றிரவு தம்முடைய சிறு மருமகனுக்காக (nephew) ஜெபித்துக் கொண்டிருந்தார், அவன் வியாதிப்பட்டிருந்தான்.) அதன்பிறகு அவர் அங்கே கீழே நோக்கிப் பார்த்து, அவர் தொடர்ந்து.... அவர்கள், அவர் சகோதரன் பில் அவர்களுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்“ என்றார்கள். அவர் எனக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வில்லை. நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அவர் கிழக்கு நோக்கி தம்முடைய தலையைத் திருப்பி, ஓ இயேசுவே, நீர் என் பிறகே வருவீர் என்று நான் அறிவேன்!“ என்று கூறிவிட்டு, தம்முடைய கரங்களை நீட்டின்படி, மரித்து, தேவனைச் சந்திக்கப் போய் விட்டார். அல்லேலூயா! ஓ, என்னே! நாம் (பரம் வீட்டிற்குப் போவோம்! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? 104அவருடைய உயிர்த்தெழுதலினுடைய அவருடைய வல்லமையின் பரிபூரணத்தில் நான் அவரை அறிய விரும்பு கிறேன்“ என்று கூறுகிற ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ இங்கே உள்ளே இருக்கிறார்களா என்று வியப்படைகிறேன், அப்படியானால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஏன் இந்த பீட அழைப்பின் பேரில் காத்துக் கொண்டிருக் கிறேன் என்று நீங்கள் வியப்படைகிறீர்களா? அதற்கு எனக் கொரு காரணம் உண்டு. சரி, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிய விரும்புகிறேன்.” 105உயிர்த் ... ஒரு உயிர்த்தெழுதலின் வல்லமை, சகோதரனே, நீங்கள் தோண்ட வேண்டிய, இழுக்க வேண்டிய, முயற்சிக்க வேண்டிய ஏதோவொன்றை நான் அர்த்தப் படுத்தவில்லை. உங்களை நீங்களே தளர்த்திக்கொள்ளுங்கள் என்றும், தேவன் அதைச் செய்து விட்டார் என்றும், அவ் விடத்தில் உங்களை எடுத்துக்கொண்டு, தூரமாக, ஏதோவொரு இடத்திற்குக் கொண்டு போவதைத்தான் நான் அர்த்தப் படுத்துகிறேன், அங்கே அவருக்காக ஜீவிக்கும்படியான அப்படிப்பட்டதொரு மகிழ்ச்சியுண்டாயிருக்கிறது. அங்கே... எதுவுமில்லை. ஏன், மற்ற காரியங்களோ பன்னிரண்டு மணிநேரத்தைப்போன்று அவ்வளவு மரித்ததாயுள்ளது, பாருங்கள். எதுவுமில்லை, ஆசையேயில்லை, கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. என்னே! உலகத்தின் அந்தப் பழைய காரியங்கள், நீங்கள் அவைகளை விட்டு விட வேண்டியதில்லை, நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம்; விட்டுவிடும்படியாக அங்கே எதுவுமில்லை, அதுவே உங்களை விட்டுவிடுகிறது. உங்களிடம் தான், அது எளிதாயுள்ளது, அதற்கு மேலும் அது அங்கேயில்லை, அது அப்படியே தூரமாகப் போய் விடுகிறது. ஆமென். எத்தனைபேர் கர்த்தரை நேசிக்கிறீர்கள், அப்படியானால், “ஆமென்” என்று சொல்லுங்கள். [சபையார், “ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.) அதை மிக உரத்த சத்தமாகச் சொல்லுங்கள். [சகோதரன் பிரன்ஹாமும் சபையோரும் “ஆமென்!” என்று சத்தமிடுகிறார்கள்.) சரி. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், ...பிள்ளையே (இப்பொழுது, மறுபக்கம் திரும்பி, கரங்களைக் குலுக்குங்கள்.) ... துக்கமுமுள்ள... உங்களுக்கு அருகிலிருக்கும் யாரோ ஒருவரோடு கரங்களைக் குலுக்கி, “இங்கே இந்தக் கூடாரத்தில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறுங்கள். அதன்பிறகு மறுபடியுமாக நேராக்கிக்கொள்ளுங்கள். .... உன்னோடு... செல்லுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம் , ஓ எவ்வளவு இனிமை! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே; விலையுயர்ந்த நாமம், ஓ எவ்வளவு இனிமை! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. இப்பொழுது மிகவும் அமைதியாக, கவனியுங்கள். இயேசுவின் நாமத்தில் குனிந்து, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம், பரலோகத்தின் ராஜாதிராஜாவாய் அவருக்கு முடி சூட்டுவோம், நமது யாத்திரை முடியும் போது. விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ எவ்வளவு இனிமை! அது இனிமை அல்லவா? பரலோகத்திலிருக்கிற எல்லாமும், பூமியின் மேலிருக்கிற ஒவ்வொன்றும் அதற்கு இயேசு என்ற நாமத்தைத் தரித்திருக்கின்றன. அதற்குத் தரித்திருக்கின்றன. பரலோகத்தின் ... விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ எவ்வளவு இனிமை! புவியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாமே. 106இப்பொழுது நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். ஒருநாள் அந்த மலையின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த மகத்தான போதகரே, நீர், “நீங்கள் எல்லாரும் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது” என்று சொல்லியிருக்கிறீர். (சகோதரன் பிரன்ஹாமும் சபையோரும் ஒன்றாக ஜெபிக்கிறார்கள், மத்தேயு 6:9 முதல் 13 முடிய - ஆசிரியர்.): பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்க ளுக்குத் தாரும். எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் தப்பிதங்களை எங்க ளுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. இரவு வணக்கம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. “இயேசுவின் நாமத்தில்!”